Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, January 4, 2018

காந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு

அனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள்.

இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே முயற்சி செய்யப்பட்ட மையக்கருத்து எவ்வளவு தூரம் வெற்றிப் பெற்றுள்ளது என்பதே முக்கியம்.

மகாத்மா காந்தி  எழுதுவதற்கு பென்சிலை சீவினால் அதனை கூராக்க மாட்டாராம். ‘கூராக்கினால் கரித்துகள் வீணாகுமே. அதை வைத்து எவ்வளவோ எழுதுவது பயன்படாமல்  போகுமே” என்று சொல்வாராம்.

குறைவில் நிறைவை கண்டவர் அவர் !

நேற்று சில வர்ண பென்ஸில்களை சீவிக் கொண்டிருக்கும் போது அதன் சீவல்களோடு வெளிப்பட்ட  வர்ணப் பொடிகள் காந்திஜியை நினைவு படுத்தியது. மீதியை கீழே உள்ள படத்தை சுட்டினால் விவரமாகப் படிக்கலாம்.



ஓரளவு  தாளின் மடிப்புப் பகுதியை வர்ணத்தின் மூலமாக மறைக்க  முடிந்தாலும் பென்சில் வர்ணத்தின் அடர்த்தி குறைவாகவே பட்டது. அதனால் ஒரு சிறிய தூரிகை உதவியால் அங்கங்கே சற்று நீர் வர்ணத்தில் அலைகளை வரைந்து  அங்கே ஒரு மீன்பிடிப்பவரின் வலை வீசும் காட்சியையும் சேர்த்தேன். இப்போது படம்  சற்று பரவாயில்லை என்று தோன்றியது.


இதில் என்ன பரிட்சார்த்தம் என்று தோன்றலாம். 

முதலாவது, வீணாகக் கிடந்த ( ஒருபக்கமே பயன்பட்ட ) வெள்ளைத்தாள்  தூக்கி எறியப்படக் கிடந்த பென்ஸிலின் வர்ணத் துகள்கள்  இரண்டும்சேர்ந்து ஒரு சித்திரமாகியது.  எனக்கு நேரமும் உபயோகமாகக் கழிந்தது.

   இரண்டாவதாக,  மூன்று சித்திரங்களை தனித்தனியாக   வலையேற்றி  இணைப்பதற்கு பதிலாக ஒரே சித்திரமாக  மாற்றி அதன் தொடர்பான விஷயத்தையும் - சித்திரக் கதையாக- சொல்ல முயற்சித்திருக்கிறேனே அது மகாத்மா காந்தி வழியில் சிக்கனத்தை நானும்  சிந்திக்கிறேன் என்பதை காட்டுகிறதல்லவா :)))))

2 comments:

திவாண்ணா said...

சுவையான முயற்சி.:)

KABEER ANBAN said...

நல்வரவு தி.வா சார்.

மிக்க நன்றி.