Hi Kabeeranban,
We've noticed that your slideshow on SlideShare has been getting a LOT of views in the last 24 hours. Great job ... you must be doing something right. ;-)
Why don't you tweet or blog this? Use the hashtag #bestofslideshare so we can track the conversation.
Congratulations,
-SlideShare Team
ஒரே நாளில் வந்த பார்வையாளர்கள் சுமார் 20000. பின்னூட்டம் 0 !! : )))
ஆனால் slide share தளத்தினர் இதை best of slide share வகையில் சேர்க்க விழைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.
கடந்த நான்கு மாதங்களாக ஆயிரத்துக்கும் குறைவாக பார்வையிடப்பட்ட அந்த விளக்கப்படம் எந்த புண்ணியவான் (களின்) ட்வீட்டர் தயவாலோ என்னவோ ஒரே நாளில் பெருமளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருகிறது.
அந்த விளக்கப் படத்தை ’தாயின் அன்பு’ என்கிற தலைப்பில் கற்கை நன்றே வலைப்பூவில் இடுகையாக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன்.
அந்த விளக்கப்படத்தில் நான் பயன்படுத்தியது என்னுடைய கீழ்கண்ட ஓவியத்தைதான்.
இந்த படத்தை ஹிந்து பத்திரிக்கையில் வந்திருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து வரைந்திருந்தேன்.
முக்காடிட்டிருக்கும் தாயின் துணியில் தெரியும் மடிப்புகளும் தாயும் சேயும் தம்மை மறந்த களங்கமற்ற சிரிப்பும் இதை வரையத் தூண்டியது.
தாயின் அன்பை கற்கை நன்றே வலைப்பூவில் படிக்க இங்கே .
ஸ்லைடு ஷேர் வலைத்தளத்தில் காண இங்கே
14 comments:
ஒவியம் ரொம்ப அழகு.சிறு வயதிலிருந்தே வரையும் பழக்கம் இருந்ததா?
வாங்க தர்ஷிணி,
//சிறு வயதிலிருந்தே வரையும் பழக்கம் இருந்ததா?//
உம். அப்படீன்னே வச்சுக்கலாம் :))
இந்த பதிவை படிச்சா இன்னும் விளக்கமா பதில் கிடைக்கும்
நன்றி
குருவே...
தாயும், சேயும் படம் அருமை...குழந்தையின் சிரிப்பு டாப்.
ஆயிரம் சொல்லுங்கள் பென்சிலின் அருமையே அருமை.
அது போல் தாங்கள் கொடுத்த சுட்டியிலிருந்த ரமணர் படமும் அழகு.
வாழ்த்துக்கள்.
நல்வரவு தமிழ்பறவை
//ஆயிரம் சொல்லுங்கள் பென்சிலின் அருமையே அருமை //
உண்மை. ரமணரின் படத்தை சற்று பெரிய வடிவில் பின்னர் ஒரு முறை வலையேற்றி விடுகிறேன்.
நன்றி
@தமிழ்பறவை
//குருவே...//
அட ! ஒரு புது ப்ரொமோஷன் குடுத்துட்டீங்களா ? நானும் உங்க மாதிரி ஏகலைவன்தான். நமக்கெல்லாம் நன்றாக படம் வரைபவர்கள் அனைவரும் குருவே :))))
வாசகர்கள் அனைவருக்கும் !
மேலே சொன்ன slide share அஞ்சல் வந்ததென்னவோ உண்மை. அங்கே views 20058 என்று கண்டதும் உண்மை. வேறு சில படங்கள் லட்சம் வாசகர்களை காட்டியதும் உண்மை.
ஆனால் இன்று ! அது ஒரு ஏப்ரல் முட்டாளாக்கும் வித்தை என்று புரிந்தது :(
லட்சத்தில் இருந்தவர்கள் ஆயிரத்துக்கு வந்துவிட்டார்கள். ஆயிரங்களில் இருந்தவர்கள் நூறுகளில் இருக்கிறார்கள்.
அவர்கள் அஞ்சலில் உள்ள ;-) கண் சிமிட்டலின் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது :)
அடடா இப்படி ஒரு ஆப்பு வச்சுட்டாங்களே உங்களூக்கு.ஆனா இந்த படம் அருமையா வந்திருக்கு:):)
நல்வரவு ராதா ஸ்ரீராம்,
எத்தனை பேர் மாட்டிக்கிட்டாங்க-ங்கிற கணக்குப் பார்க்கத்தான்
"Why don't you tweet or blog this? Use the hashtag #bestofslideshare so we can track the conversation."
சொல்லினாங்க போலிருக்கு :). ப்ளாக் கணக்குல பிடி கொடுக்கவில்லை ஆனா ட்விட்டர்ல் மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறேன் :))
பொய் தித்திக்குது உண்மை கசக்குது !!
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
ரொம்ப அருமையாக இருக்கு மூன்று படங்களும்,அதிலும் ரமணமகரிஷி படம் ரொம்ப அருமை. நானும் பென்சிலில்தான் வரைந்துக்கொன்டிருந்தேன், கலர் கொடுக்றதுக்கே பயம். அது மாதிரி நிறைய படங்கள் வீணாகி போயிருக்கு.
மீன்கொத்தி படம் வரைந்த்து ஒன்று இருக்கு. இன்னும் கலர் கொடுக்கல பார்க்கலாம் கலர் கொடுத்த பிறகு பதிவேற்ற வேண்டும்.
தர்ஷிணி உங்க உற்சாகம் ஒரு பூஸ்ட்.
// கலர் கொடுக்றதுக்கே பயம். அது மாதிரி நிறைய படங்கள் வீணாகி போயிருக்கு //
அதுக்கு ஒரு வழி இருக்கு. நல்லா இருக்கிற பென்சில் படத்தை மங்கலான நகல் எடுத்து அந்த நகலில் கலர் செய்து பாருங்கள். இந்த முறையை என்னுடைய குரங்காட்டி பதிவில் விளக்கியிருக்கிறேன்.
மீன்கொத்தியை இந்த முறையில் வர்ணம் தீட்டிப் பாருங்கள் :)
போய் பார்த்துவிட்டேன் கபீரன்பன் சார், அருமையாக வரைந்திருக்கிறீர்கள்...
மிகவும் நன்றி.கண்டிப்பாக நகல் எடுத்து முயற்சி செய்கிறேன்..
"சித்திரமும் கை பழக்கம் தான்”- நானும் என்னென்னவோ செய்து பார்க்கிறேன்,சரியான இடத்தில் கோடு சரியான அளவில் விழமாட்டேன் என்கிறது.
//,சரியான இடத்தில் கோடு சரியான அளவில் விழமாட்டேன் என்கிறது //
என்ன குமார் இப்படி சொல்லிட்டீங்க !! இப்பிடி யாரும் வருத்தப்படக்கூடாதுன்னு தானே கவிஞர் பாடி வச்சிருக்காரு
“ மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்,
நீ சொன்னால் காவியம் “ :)))
காவியம் படைக்கிறவர் நீங்க ! முயன்றால் ஓவியமும் வந்திடும்.
Post a Comment