Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Monday, January 4, 2016

நம்பிக்கை தான் விளக்கு

2015 கழிந்து 2016 வந்தாயிற்று. சென்ற ஜுலை மாதம் தலையில் எதிர்பாராத ஒரு சிறு அறுவை சிகிச்சை. விளைவு , வலது கை பேனா அல்லது பென்சில் பிடித்து எழுதும் திறனைசற்று இழந்து விட்டது. கையெழுத்து கூட போட இயலாமை. நான் எழுதுவதை என்னாலேயே படிக்க முடியவில்லை. சிறு குழந்தையின் கிறுக்கல்கள் போலக் காணப்பட்டது. குடும்பத்தினருக்கு உடல் நலமானதில் மகிழ்சி. எனக்கோ பெரும் மனவாட்டம். ஓவியம் வரைய முற்பட்டாலும் அதே பிரச்சனை. சிறிய வளைவு சுளிவுகளுக்கு விரல்கள் ஒத்துழைக்க மறுத்தன. ஆனால் வேறு எல்லா செயல்களும் - சாப்பிடுவது, சட்டை அணிவது, தட்டச்சு செய்வது போன்றவை- எல்லாம் இயல்பாகவே நடந்தது. மருத்துவர் நாளடைவில் இந்தக் குறை சரியாகி விடும் என்று தைரியம் அளித்தார்.
தன் முயற்சியில் சற்றும் தளரா விக்கிரமன் போல நான் கணினி உதவியால் படம் வரைந்தேன். பயன்படுத்தப்பட்ட மென்பொருள் MS  Paint brush.

கைகளே இல்லாதவர்கள் வாயினாலும் காலினாலும் அற்புதமான ஓவியங்களை வரைந்து சரித்திரம் படைக்கும் கலாவிதர்களை போற்றி அவர்களால் உற்சாகம் அடையும் ஆண்டாக 2016 மலரட்டும்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

14 comments:

கோமதி அரசு said...

வணக்கம் கபீர்ன்பன், வாழ்க வளமுடன். நான் இரண்டு நாட்காளாய் உங்களை நினைத்தேன்.உண்மை,உங்களிடமிருந்து புத்தாண்டு வாழ்த்து வந்தவுடன் மகிழ்ந்தேன். இங்கு வந்தால் நீங்கள் சொன்னதை கேட்டு வருத்தம் அடைந்தேன். இறைவன் அருளுலால் விரைவில் நலம் பெறுவீர்கள். சித்திரம் மிக அழகு. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

உற்சாகமாய் இந்த ஆண்டு இருக்கட்டும் உங்களுக்கு. நானும் ஊர் பயணங்கள் மேற் கொண்டதாலும், குடும்ப கவலைகளாலும் நிறைய எழுத வில்லை. உங்கள் தன்னம்பிக்கை மிக்க பதிவை படித்து இதுவும் கடந்து போகும் என்று நினைத்துக் கொள்கிறேன். பெங்களூர் சென்ற மாதம் வந்தேன். நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நினைத்து கொண்டேன்.

கோமதி அரசு said...

நம்பிக்கை ஒளியோடு இந்த ஆண்டு பயணம் செய்வோம். நன்றி, வாழ்க வளமுடன்.

KABEER ANBAN said...

தங்கள் எலலோருடைய அன்புக்கு என்றும் கடமைப்பட்டவன் நான். சென்ற மாதம் மைசூருக்கு வந்துவிட்டேன். இந்தப் பக்கம் வந்தால் தெரிவிக்கவும்.
பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.
வைத்தயர் கூறியது போலவே கடந்த மூனறு மாதங்களில் நல்ல முன்னேற்றம் உள்ளது. தாங்கள் கூறியது போல இதுவும் கடந்து போகும்.
நன்றி

Geetha Sambasivam said...

சின்னச் சின்ன சமையலறை விபத்தினால் எனக்கும் இப்போது வலக்கை கொஞ்சம் சரியில்லை. அதோடு அவ்வப்போது மணிக்கட்டில் வலியும் வருகிறது. தொடர்ந்த பயணங்கள், குடும்பத்தின் சூழ்நிலை ஆகியவற்றால் என்னாலும் அதிகம் இணையம் வர முடியலை. நீங்கள் மைசூர் வந்துவிட்ட செய்திக்கு மகிழ்வதா, உங்கள் உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு வருந்துவதானு தெரியலை! எல்லாம் நலமே சரியாக எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த வருடப் புத்தாண்டு வாழ்த்து உங்களிடமிருந்து வராததால் உடல் நலம் சரியில்லையோ என்றே நினைத்தேன். அதே போல்! :(

Geetha Sambasivam said...

பொதுவாக இப்போதுள்ள சூழ்நிலை அனைவருக்குமே ஏதேனும் ஒரு வகையில் சிரமங்களைக் கொடுக்கிறது. இந்நிலை மாறப் பிரார்த்தனைகள் செய்வோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டிலிருந்து ஒட்டுமொத்தமான நிலைமை சரியாகப் பிரார்த்திப்போம்.

Vasudevan Tirumurti said...

ada! what a nice effort. praying for a speedy recovery!

ஜீவி said...

நீங்கள் வெகு மென்மையாகச் சொல்லியிருந்தாலும் சொல்லியிருஜ்ததை சட்டென்று உள்வாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தேன். உங்கள் முயற்சி பயிற்சியாகி பழைய நிலைக்குத் திரும்புவது நிச்சயம். இறைவனின் பரிபூரண அருள் உங்களுக்கு உண்டு. தமிழக ஒரு பிரபல பத்திரிகை ஓவியருக்கும் இதே அனுபவமாகிப் பின் சரியானதாக படித்த நினைவு.

படம் அந்த கலர் காம்பினேஷன் எல்லாம் அழகு. அலைபட்ட மனசுக்கு இதமான வருடலைக் கொடுத்தது படம். அதை உணர்தேன். மிக்க நன்றி, கபீரன்ப! ஒளிமயமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

KABEER ANBAN said...

நல்வரவு கீதா மேம்
இந்த வருடத்தில் சின்னச் சின்ன சங்கடகள் தீர்ந்து பயணங்கள் இனிதாக பிரார்த்தனைகளையும் இனிமையான பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

KABEER ANBAN said...

நல்வரவு தி.வா. சார்.
தங்களுடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி

KABEER ANBAN said...

வருகைக்கு நன்றி ஜீிவி சார். தாங்கள் வாழ்த்தியது போல் கடந்த மூன்று மாதங்களில் பெரும் முன்னேற்றம் உள்ளது. விரைவிலேயே புதிய ஓவியங்களை பகிர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.அது வரை அப்போது இப்போது என கண்ணில் படும் பழைய ஸ்டாக்கை வைத்து காலம் ஓட்டுவேன்.:-)
பாராடடுக்கு நன்றி

Pattabi Raman said...

வணக்கம் கபீரன்பன் .இன்றுதான் உங்கள் வலைப்பூவில் ஒரு அழகான சீன குதிரையைப் பார்த்தேன். அப்படியே உங்கள் வலையில் நுழைந்தேன். உங்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு முன்னேறி வருவதை கண்டேன். விரைவில் நலம் பெறுவீர்கள். கவலை வேண்டாம். ஆபத்துக்களும் விபத்துகளும் வாழ்வின் அங்கங்கள். அவை நமக்கு எப்போதும் நன்மையே விளைவிப்பவை. அதில் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். அதை புரிந்து கொண்டால் போதும் அவைகள் நம்மை நிலை குலைய செய்யமாட்டா என்பது என் அனுபவம். இசையில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். விரைவில் முன்னேற்றம் காண்பீர்கள் 2013 ஆம் ஆண்டு இறுதியில் விபத்தில் சிக்கி பிழைத்த பின் இசையில் கவனம் சென்றது ஓராண்டாக கடின உழைப்பின் பலன் .(என்னுடைய புதிய அவதாரம்-மவுதார்கன் இசை-117 காநோளிகளை -வெளியிட்டுள்ளேன் -you tube-pattabiraman-mouthorgan vedios -listen and enjoy -நம்பிக்கையே வாழ்க்கை

KABEER ANBAN said...

நம்பிக்கையூட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பட்டாபி சார். தங்கள் மவுதார்கன் காணொளிகளை கண்டு களித்தேன். கேட்டுக் களித்தேன் என்றால் பொருத்தமாக இருக்கும், ஏனெனில் சிலவற்றில் அசல படங்களாக இருந்தன. சில சற்று சீர்மையுடன் பாடல் வரிகளை தாங்கிவந்தன. youtube வலையேற்றுவதில் அதிக சேமிப்புத் திறன் தேவைபடுகிறது. தரவிறக்கம் ஆகும் நேரத்திலும் அதுவே வேகக்குறைவை சில வகை இணைப்புகளில் ஏற்படுத்தக்கூடும். அதனால் வெறும் ஒலிப்பதிவுகளை தாங்கி வரும் Music Cloud-ல் போட்டு வைத்தால் பல்வகை உபகரணங்களிலும் தரவிறக்கம் செய்ய இயலும். குறைவான அளவுகொண்ட கோப்புகளை அதிகபடியான நேயர்கள் கேட்டு மகிழலாம். அதன் இணைப்பு இதோ https://www.mymusiccloud.com/

புது முயற்சிகளுக்கு என்றும் உற்சாகம் தரும் தங்களுக்கு நன்றி

Pattabi Raman said...

நன்றி கபீரன்பன் . சார்,
எனக்கு முறையான இசை பயிற்சி கிடையாது. எல்லாம் ஒரு ஆர்வம்தான். ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், என எல்லா மொழி பாடல்களையும் திரைப்பட, கர்நாடக சங்கீதம் உட்பட. மவுதார்கனில் கொண்டு வந்துள்ளேன்.
நானே இயற்றியும் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளேன்.
இன்னும் NIRAYA PAADALGAL வெளியிட எண்ணம் உள்ளது.
தொடக்கத்தில் பாடலை மட்டும் கைபேசியில் பதிவு செய்து window movie maker ல் காணொளியாக தயார் செய்து பிறகு movie கோப்பாக மாற்றி YOU TUBE ல் வெளியிட்டு வந்தேன். தற்போது கைபேசியில் VEDIO MODE ல் பதிவு செய்து தலைப்புகளுடன் வெளியிட்டு வருகிறேன். அதனால் கோப்பின் அளவு 40 MB முதல் 60 MB வரை வருவதால் UPLOAD ஆவதற்கே அதிக நேரம் பிடிக்கிறது.
நான் ஒவ்வொரு பாடலையும் பயிற்சி செய்வதற்கே பல நாட்கள் பிடிக்கிறது. ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறேன். இந்த TECHNIC எல்லாம் நானே தேடி கற்றுக்கொண்டது.