காமிரா வாங்கிய புதுசு. அப்போதெல்லாம் இந்தியாவில கோடக், டப்பா காமிரா விட்டா கிடையாது. நான் வாங்கினது யாஷிகா,ஆட்டோ ஷட்டர் ஸ்பீட். வாங்கின சம்பளத்துக்கு கலர் ஃபிலிம் கொஞ்சம் கையை கடிக்ககூடிய நிலைதான். ஆனாலும் உற்சாகம் விடவில்லை. பலமுறை ரோல் ரோலாக வீணாக்கியதும் உண்டு. அப்பப்ப சில நல்ல படங்களும் அமைஞ்சு பல வருஷங்களுக்கு நினைவுல நிக்கிறத பார்க்கும் போது அது இப்ப பெரிசா தோணல.
அதனாலத்தான் அந்த படத்தையும் இணைச்சு இந்த முறை என்னோட வரைதிறன் முயற்சிய காட்டியிருக்கேன்.
பேஸ்டல் கலர் படம் போட ஆரம்பித்த காலம். அதனால தடுமாற்றங்கள் ரொம்பவே உண்டு. [இப்ப மாத்திரம் ரொம்ப ஸ்டெடியான்னு கேக்காதீங்க. இப்ப ரொம்ப முயற்சி செய்யறதே ரொம்ப கம்மி :( ]
குறிப்பா குழந்தையோட காலு கொலுசு என்ன பண்ணினாலும் சரியா வரலை. கொலுசு இந்த பாடு படுத்தினப்பறம் சோபா மெத்தை இன்னமும் பயமுறுத்திச்சு. அடடா ஆழம் தெரியாம காலவுட்டோமே அப்படீன்னு நானாவே ஒரு டிசைன் கற்பனை பண்ணி ஒரு வழியா முடிச்சாச்சுன்னு பேர் பண்ணிட்டேன்.
ஃபோட்டோவ விட வரைபடம் ரொம்ப பெரிசு. படத்தை பார்த்தாலே தெரியும். :))சட்டம் போட்டு அன்பளிப்பா கொடுக்கலாம்னு வரைஞ்சு, சரியா வராததுனால நானே வச்சுகிட்டேன்.
படத்திலிருப்பது என் சகோதரியோட மகள். நான்கு மாத குழந்தையாக இருந்த போது எடுத்த் படம். இன்றைக்கு ஒரு முழுநேர மருத்துவர். :))
6 comments:
வாவ், சூப்பரா வரைஞ்சு இருக்கீங்க!
nice painting.. sir
@ ப்ரியா
@ தர்ஷிணி
தொடர்ந்து உற்சாகம் கொடுத்துக்கிட்டிருக்கீங்க, நன்றி. தற்போது என் வீட்டில இணையத் தொடர்பு இல்லாததால வலைப்பக்கங்களைப் படிக்க முடியாம இருக்கு. நேரம் கிடைக்கும் போது வர்றேன். மிக்க நன்றி
கனிமொழிகளைப் படிக்க வந்தால் பாப்பா கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிட்டது. மாமாவுக்கு நிறைய வேலை வச்சிருந்திருக்கா போல, வாழ்த்துகள், மாமாவுக்கும், மருமகளுக்கும். அழகான படம், குழந்தையும் தான். :)))))) நாக்கைத் துருத்திக்கொண்டு கண்களில் விஷமம் சொட்டுகிறது. தெவிட்டாத இன்பம்!
நல்வரவு கீதா மேடம்,
//கனிமொழிகளைப் படிக்க வந்தால் பாப்பா கண்ணையும் கருத்தையும் கவர்ந்துவிட்டது//
பாப்பாவின் கனிமொழிகளும் தெவிட்டா இன்பமே! சிருஷ்டியின் அற்புதமும் தெவிட்டா இன்பமே. வாசகர் தரும் உற்சாகமும் தெவிட்டா இன்பமே. மிக்க நன்றி
ஏங்க அப்பலாம் கிளிக் III நு ஒரு டப்பா கேமரா இருந்துச்சே மறந்துடீங்களா?
Post a Comment