Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, December 2, 2017

Paint3 D -ல் சில முயற்சி

விண்டோஸ் 10-ல்  Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திருக்கிறார்கள்.  எனக்கு பெரும்பாலும்  அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்,  Adobe Photoshop இருந்ததாலும்  இதை கண்டு கொள்ளவே இல்லை.  சமீப காலமாக  ஃபோட்டோ ஷாப் தொந்தரவு கொடுத்ததால்  [எவ்வளவு நாளக்கு ஓசி கொடுப்பான் :-) ] பல நல்ல உபகரணங்கள் இல்லாமல் சிரமமாக இருந்தது. சரி, Paint 3D -ல் என்னதான் செய்ய முடியும் பார்க்கலாம் என்று திறந்தேன்.

இது Google Sketch up ஐயும் Adobe photo shop ஐயும் சேர்த்துப் பண்ணிய அவியல். இரண்டில் எதையும் உருப்படியா காப்பி அடிச்ச மாதிரி தெரியவில்லை.

Adobe Photoshop முன்னால் இது ஒன்றுமே இல்லை. ஆனாலும் MS Paint ஐ காட்டிலும் பலவிதங்களில் முன்னேற்றம் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரே வர்ணத்தை பல விதங்களில், பல அடர்த்திகளில் பூசுவதற்கு வசதி உண்டு. அதே போல் நீர் வர்ணம், எண்ணெய் குழைவு, பென்சில், CRAYON, SKETCH PEN  என்கிற பல முன்பே இருந்தாலும்  MS Paint அடர்த்தி மாற்றங்கள்  செய்ய இயலாததால்  அவற்றை அவ்வளவாக பயன்படுத்த முடியவில்லை. 

இன்னொரு முன்னேற்றம் என்னவென்றால் நாம் வரைபடத்தை  பல கோணங்களில் சுழற்றி, வேண்டியவாறு அதை பொருத்திக் கொள்ளலாம். இது மூன்று நான்கு வரைபடைங்களை இணைப்பதற்கும்  சில special effects  கொடுப்பதற்கும் பயன்படும். இதை தவிர சில 3D பொருட்களை வரைந்து, பலூன் போல அதை விரித்து சுருக்கி பல  கோணங்களில் பொருத்தி பார்க்கலாம்.   அதில் நாய் பூனை என்று எதை முயற்சித்தாலும் களிமண்ணில் செய்யப்படும் மாடல் போல இருக்கிறது. அதற்கு உயிர் கொடுக்க வழி இருக்கிறதா என்று தேட வேண்டும்.

வித்யாவாஹினி  தன்னார்வக் குழு கேட்டுக் கொண்டதன் பேரில் கிராமத்து பெண்மணியின் வாழ்க்கை என்பது பற்றி சில படங்களை வரைந்து கொடுத்தேன். அதில் ஒரு சிலவற்றை Paint 3D வைத்து வர்ணம் பூசி பார்த்தேன்.  அதில் ஒரு சில.

இதில் ஆட்டுகல்லும் அந்த பெண் அமர்ந்திருக்கும் படிக்கல்லும் digital கிரேயான் கலர் வைத்து செய்யப்பட்டுள்ளது.


ஒரே படத்தை  எப்படி பல வர்ணங்களாகவும்  வேறு முகபாவங்களை வெளிப்படுத்துமாறு மாற்றலாம் என்பதை மேலே காணலாம்.  ( படங்களை சொடுக்கினால் பெரியதாகக் காணலாம்)






எப்படியோ, MS Paint  ஆரம்பப் பள்ளியை தாண்டி  உயர்நிலை பள்ளிக்கு வந்தாச்சு.  இன்னும் Adobe,  Google  போல கல்லூரி நிலையை எட்டிப்பிடிக்க  எவ்வளவு காலம் பிடிக்குமோ தெரியாது.

உயர்நிலை பள்ளிக்கூடம்  வரைக்கும்தான் இலவச கல்வி அதன் பின் செலவழிக்கத் தயாராக வேண்டும் :)))




No comments: