இது சாதாரண வரைப் படத் தாளில் நீர் வர்ணத்தால் வரையப்பட்டது. இதை வரைய தேவைப் பட்ட நேரம் சுமார் 15 நிமிடங்கள். தொலைக்காட்சியில் சீன பெயிண்டிங்குகள் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். அவர்களின் மூங்கில் காடுகளையும், இலைகளையும் வரைதலை தூரிகையை எடுக்காமலேயே போட்டு காட்டியதில் அசந்து போய் அவசர அவசரமாக நானும் ஒரு காலண்டரில் இருந்த படத்தை போட்டு பார்த்ததன் விளைவு. இதை பென்சிலில் வரைந்து கொள்ளாமலே நேரடியாக வரைந்ததும் மிக குறுகிய நேரத்திலே செய்ததும் சிறப்பு அம்சம்.
இத்தகைய படங்களில் perfection ஐ எதிர்பார்க்கக் கூடாது என்பதாகவும், பெரும் கலாவிதர்கள் இம்முறையை on-the-spot notes போல உபயோகிப்பார்கள் என்றும் பின்னர் அறிந்து கொண்டேன்
ஏனோ இதைத் தொடர்ந்து பின்னர் இதே முறையில் வரையவில்லை. :((
6 comments:
Test Post
வண்ணப்படம் பிரமாதம்.சின்ன சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுது அம்மா?
இருபறவைகள் - வண்ணப்படம் அருமை. வாழ்த்துகள்.
அருமையா இருக்கு
//இத்தகைய படங்களில் perfection ஐ எதிர்பார்க்கக் கூடாது///
இதை படிச்சா எனக்கு என்ன நினைவுக்கு வருது தெரியுமா.. The art of perfection lies in its imperfections...
எங்கே படிச்சேன்னு மறந்து போச்சு... ஆனா இந்த வாசகம் மட்டும் மறக்காம இருக்கு
ரொம்ப அர்புதமா இருக்கு உங்கள் ஓவியங்கள்.. கலை மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி தீபா,
எனக்கு perfection பற்றி இன்னுமொரு வரி நினைவுக்கு வ்ருது.
"small things make perfection but perfection is not a small thing" :))
//small things make perfection but perfection is not a small thing///
could not agree more..
Post a Comment