Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, December 9, 2007

கறுப்பு -வெள்ளை : காலத்தால் இளமை

என்னதான் சொல்லுங்கள் கறுப்பு வெள்ளைப் படங்கள் தரும் ஒரு நிறைவை வண்ணப்படங்கள் தருவதில்லை. இப்படி சொல்வது நான் இல்லை, ஒரு பெரிய புகைப்பட நிபுணர். பெயர் நாகராஜன் என்று நினைவு. ஒரு ஓவியனின் பார்வையிலும் பெரும் வித்தியாசம் இருக்கமுடியாது.

மைசூர் திப்புசுல்தான் அரண்மனையில் அவருடைய குடும்பத்தை ஒரு ஆங்கிலேய ஓவியன் வரைந்திருந்த கறுப்பு வெள்ளைப் படங்களைப் பார்த்த போது அது உண்மையெனப் புரிந்தது. மிகவும் உயிரோட்ட மிக்க அந்த ஓவியங்களைப் பார்த்தபின் எனக்கும் அது போல வரைய வேண்டும் என்று ஆர்வம் பற்றிக்கொண்டது.

என்னைப் பொருத்தவரை கறுப்பு வெள்ளைப் படங்களில் ஒரு வசதி. வெறும் காகிதமும் பென்ஸிலும் போதும். மன அரிப்பிற்கு உடனடியான நிவாரணம். சமயத்தில் பென்ஸில் இல்லாவிட்டால் பேனாவே துணை.

வேகமாக வரைவதை -sketching- பயிற்சி செய்ய வேண்டுமானால் பேனாவே சிறந்தது. அதில் அழித்து திருத்த முடியாது. பென்சிலில் மீண்டும் மீண்டும் அழித்து மாற்றத் தோன்றும். தூக்கிப் போட்டு விட்டு வேறொன்றை புதிதாக துவங்க மனம் வராது. இது என் பலவீனம். இந்தப் பதிவிற்கான படம் இதோ !!



No harsh lines please என்று ஒரு உபதேசத்தை படித்ததன் விளைவு இந்தப் படம். இத்தகைய படங்களை வரைய ஆரம்பித்த பின்தான் பென்ஸிலை விட அதிக பங்கு ரப்பருக்கு உண்டு என்பது புரிந்தது. எப்படியோ அந்த மாடல் பெண் இன்னும் என் வரை புத்தகத்தில் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

1 comment:

cheena (சீனா) said...

படம் அருமை. வாழ்த்துகள். மேன்மேலும் முன்னேறுங்கள்.