என் முதல் வகுப்பில் முதல் பாடம் காக்காய் பள்ளிக்கூடம்.
வாத்தியார் காக்கை மாணவ காக்கைகள் எல்லாம் கூரை மேல் அமர்ந்திருக்கும் . எல்லா காக்கைகளுக்கும் நீள வாட்ட தொப்பி உண்டு. வாத்தியார் காகம் சற்று பருமனாக புகைக்கூண்டின் மேல் இருப்பது போலவும் எட்டு, பத்து மாணவ காக்கைகள் கூரை மேல் சிலேட்டுடன் அமர்ந்திருக்கும் சித்திரம் மறக்கமுடியாதது. பள்ளிக்கு போவதன் அவசியத்தை அழுகின்ற குஞ்சு காக்கைக்கு அதன் தாய் காகம் புரிய வைப்பது பாடத்தின் மையக் கருத்து என்பதாக ஞாபகம்.
ஒரு பத்திரிக்கையில் இதை நினைவூட்டும் வகையில் ஒரு நிழற்படத்தை பார்த்தவுடன் கை அரிக்கத் தொடங்கியது. கையில் கிடைத்த ஒரு விளம்பரத் தாளின் பின்பக்கத்தில் பேனாவை வைத்து வரைந்த சித்திரம் கீழே.
இதில் முக்கியமான சேலஞ்ச் ஓடுகள். அதை ஸ்டிப்லிங் என்ற முறையில் புள்ளிகள் வைத்து அதன் அடர்த்தியை வேறு படுத்துவதன் மூலம் ஓடுகளின் வளைவுகளை காட்ட முயற்சித்திருக்கிறேன். கூரையின் கீழ் நிழல்களின் ஒளி அளவை க்ராஸ் ஹேட்சிங் மூலம் செய்தேன்.
கோட்டை விட்டது ஓடுகளின் நேர்வரிசை. பேனாவில் வரைவதில் உள்ள சிக்கல்களில் இது ஒன்று. சுமார் ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.
No comments:
Post a Comment