Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Wednesday, December 5, 2007

முதல் வணக்கம்



ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தனை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

இது ஒரு புகைப்பட பத்திரிக்கையில் வெளியான புகைப்படத்தைப் பார்த்து வரையப்பட்டது. பேஸ்டல்கள் எனப்படும் வர்ணக் கட்டிகள் கொண்டு தீட்டப்பட்டது. இப்படத்தில் கற்களின், சிற்பத்தின் நளினமும், ஒளிச் சிதறலும் என்னை வரையத் தூண்டின.

ஆடத் தெரியாத .......... யா மேடை கோணல் ன்னு சொன்னாளாம். பிள்ளையாருக்கு அவனப்பனைப் போல ஆட வராதுங்கிறதால கோணல் மேடையை நீயே போட்டுக் குடுத்துட்டியா அப்படீன்னு ஏற்கனவே ஒரு கமெண்ட் வந்தாச்சு. உங்க கமெண்ட் போடுங்க

1 comment:

cheena (சீனா) said...

கபீரன்ப, பிள்ளையாரை முதலில் வணங்கி, வலைப்பூ ஆரம்பித்திருக்கிறீர்கள். கை விட மாட்டார். மேடை கோணலானாலும். ஆடுவார். ஆதரிப்பார். வாழ்த்துகள்.