Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, December 30, 2012

கேரி ஸோபர்ஸ்-ஸைத் தெரியுமா ?

சமீபத்தில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய போது ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. என் நினைவிலிருந்து நழுவிப் போயிருந்த ஒரு வரைபடம் என் மேசை மேல் இருந்தது.
 ஊரிலிருந்து வந்திருந்த என் சகோதரன் அவனது அலுவலக மேசை கண்ணாடி அடியில் அதை பாதுகாத்து வந்திருக்கிறான். சரியாக ஆறு வருடங்கள் !!. வரைவு தேதி 01-01-2006. அவனுக்கு நன்றி.
எனக்கு பரம சந்தோஷம், என் வலைப்பூவில் பதிவதற்கு இன்னொரு மலர்ச்சியான சிரிப்புப் படம் கிடைத்தது பற்றி.

வெற்றிச் சிரிப்பு

என் சிறுவயதில் அடிக்கடி கேட்ட கிரிகெட் விளையாட்டின் ஒரு பெரும் புள்ளி கேரி ஸோபர்ஸ். இன்றும் அவர் கிரிக்கெட் விளையாட்டின் ஒரு சகாப்தம் என்று கொண்டாடப்படுவதற்கு காரணமில்லாமல் இல்லை.
மேற்கிந்திய தீவின் கிரிகெட் குழுவின் கேப்டனாகப் பணியாற்றி 1974 ஓய்வு கொள்ளும் போது அவர் முதல்தர பந்தயங்களில் எடுத்த ஓட்டம் 8064. அன்றைய தேதியில் அதுவே மிக அதிகமான ஓட்ட சாதனையாகும். ஆனால் அவர் மேற்கிந்திய குழுவில் முதலில் இடம் பெற்றது ஒரு பந்து வீச்சாளாராகத்தான். வேகப்பந்து சுழற்பந்து இரண்டிலும் திறம்பட பந்து வீசும் திறமையை காட்டினார். காலப்போக்கில் சிறந்த ’ஆல்ரவுண்டர்’ என்னும் வகையில் மட்டை வீச்சிலும் மைதான சேவையிலும் பரிமளிக்கத் தொடங்கி அணியின் தலைவராக பொறுப்பேற்கும் தகுதியை வளர்த்துக் கொண்டார்.

1954-ல் 16 ஆம் வயதில் அணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டவர் 1967-ல் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். ஸோபர்ஸ் தமது மட்டைவீச்சில் கிரிகெட் உலகம் மறக்க முடியாத இரண்டு சாதனைகளை முதன் முதலாக செய்து காட்டியவர். முதலாவது 365 ஓட்டங்கள் எடுத்தும் ஆட்டத்தை இழக்காமல் நின்றது. இரண்டாவது, வேறொரு பந்தயத்தில் ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர் அடித்து 36 ஓட்டங்களை எடுத்துக் காட்டியது.

இந்த வருடம் ஒரு வரைபடம் கூட வலையேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தை ஸோபர்ஸ் -படத்தின் மூலம்- அதாவது என் சகோதரன் உதவியுடன் போக்கிக் கொள்கிறேன்.

வாசகர்கள் யாவருக்கும் ஆங்கிலபுத்தாண்டு-2013 சிறப்பாக இருக்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நீங்களும் இந்த வலைப்பூ ஸோபர்ஸ்-ஸின் சுறுசுறுப்பை பெற்று 2013-ல் அதிக இடுகைகளை காண வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்  :)))

4 comments:

sury siva said...

அடடா !! 2013 நன்றாகத் துவங்கப்போகிறது நன்றாகவே என்பதற்கு ஒரு நல்ல அறிகுறி. தங்கள் பதிவே.

தங்கள் பதிவைப் படித்து எத்தனை மாதங்கள்... வருஷங்களோ ? ஆயிற்று ?
எழுதுவது இல்லயா ?

சோபர்ஸ் பந்துவீச்சு மட்டுமல்ல, மட்டைசுழற்றுவதிலும் நிகரற்று விளங்கினார்.
ஹன்ட், ஹோல்ட், ரிச்சேர்ட்ஸ், பினோ, சோபர்ஸ் இவர்களெல்லாம் இருந்தது வெஸ்ட் இன்டீசின் பொற்காலம்.

உலகக்கோப்பையை அவர்க்ள் வென்றது முதலிலெ அவர்கள் தானே !!

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.
www.vazhvuneri.blogspot.com

KABEER ANBAN said...

ஆசிகளுக்கு மிக்க நன்றி சூரி ஐயா,

//எழுதுவது இல்லயா ? ///

ஆமாம் வேலை பளு காரணமாக எழுதுவது மிகவும் குறைந்து போயிருக்கிறது.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
நன்றி

திவாண்ணா said...

உமேஷ் சார், வந்துட்டேன். ரசித்தேன். ஸ்கூல் படிக்கும் காலங்களில் ஆதர்ச விளையாட்டு வீரர்.

KABEER ANBAN said...

நன்றி வாசுதேவன் சார்.
இந்த வலைப்பக்கத்தையும் புக்மார்க் செய்து விடுங்கள் :)