கேரி ஸோபர்ஸ் படத்தை 2012 -ல் போட்ட பிறகு இந்த வலைப்பூவில் ஒரு படமும்
வலையேற்றவில்லை. சித்திரங்கள் வரையாமலில்லை. ஓரளவு வரைந்தேன். ஆனால்
வலைப்பக்கந்தான் வரமுடியவில்லை.
அதனால் 2013 முடிவதற்குள்ளாவது, இந்த வருட கணக்குக்காக ஓரிரு சித்திரங்களை வலையேற்றி விடுவோம் என்ற எண்ணத்துடன் வந்தாச்சு.
பென்சில் ஜாமர்ஸ் என்ற கலைஞர்களின் இணைய அமைப்புக் குறித்து தமிழ்பறவை எழுதியதிலிருந்து எனக்கும் ஸ்பாட்-ஸ்கெட்சிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கூடியிருந்தது.
அதன் விளைவாக சில படங்களை வரைந்தேன். இவை நான் வசிக்கும் ரிலையன்ஸ் டவுன்ஷிப்-பின் சில காட்சிகள். எல்லாமே ஞாயிறு காலை வேளை ஆறிலிருந்து எட்டு மணிக்குள்ளான காட்சிகள். அப்போது தான் யாரும் இருக்கமாட்டார்கள்.
பூங்காவில் காலுடைந்த சிமெண்ட் பெஞ்ச் எதிரும் புதிருமாக நான்கு. அதை எதிரில் அமர்ந்து வரைவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. புகைப்படத்தை வைத்து வரைந்தால் சுலபமாகக் கூடிய காட்சிகள், நம் கண்கள் காணும் முப்பரிமாணக் காட்சியை வரைபடத்திற்கு மாற்றுவது கடினமான காரியம்தான். இது தொடர்ந்து பயிற்சி செய்யாமல் கைவராது.
இலையுதிர்ந்த மரத்தைச் சுற்றி வளர்ந்திருக்கும் அடர்ந்த இலைகள் கொண்ட செடிகளும் கூட ஒரு சித்திரத்திற்கு கருப் பொருளாகலாம் !!

No comments:
Post a Comment