Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Sunday, November 6, 2011

நெற்றிக்கு ஏன் வெள்ளை அடிக்கிறீர் ?

பட்டை பட்டையாய் நெற்றியில் மற்றும் தலையில் திருநீறு. ஒரு நாத்திக இளைஞன் அவரைப் பார்த்துக் கேட்கிறான் “ பெரியவரே நெற்றிக்கு ஏன் வெள்ளை அடிக்கிறீர் ?”
.
என்ன பதில் சொல்லியிருப்பார் ?
அது கீழே உள்ள சுட்டி ஒன்றில் இருக்கிறது.




இன்னொரு வாரியார் சுவாமிகள் கிடைக்கப் போவதில்லை. இன்று, நவம்பர் 7 ஆம் தேதி அவருடைய நினைவு நாள். மறைவு நாள் ( 07-11-1993 )

அவருடைய சொற்பொழிவில் அருணகிரிநாதர் வரலாறை பள்ளியில் படிக்கும் போது கேட்டிருக்கிறேன். சிரிக்கச் சிரிக்க பேசினார். அவரது நகைச்சுவை உணர்வை தமிழ் மக்கள் யாவரும் அறிவர்.

அவருக்கென்று சில உயர்ந்த உள்ளங்கள் வலைப்பூக்களில் நல்ல பல தகவல்களை கொடுத்துள்ளார்கள். அவற்றைப் படித்து மகிழ இணைப்புகளைச் சுட்டுங்கள்.

1) வாரியார் சுவாமிகள் டாட் காம்

2) வாரியார் பதில்

3) வள்ளல் வாரியார்


மேலே உள்ள படம் என் சிரிப்பு சீரீஸுக்காக வரைந்தது. வர்ணப் பென்ஸில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

ஆன்மிகப் பெரியவர்களின் அருட் சிரிப்பே ஒரு மருந்தாகும்

1 comment:

kankaatchi.blogspot.com said...

படம் அருமை.
பாராட்டுக்கள்

வாரியார் ஸ்வாமிகள்
திருப்புகழுக்கு முக்கியத்துவம் அளித்து
மக்களிடையே முருகன் புகழை கொண்டு சென்றார்.

கண்டவன் சொல்லும் பேச்சை கேட்காதே
(இறைவனை) கண்டவர்கள் சொல்லும் பேச்சை கேள் என்பது அவர் அடிக்கடி சொல்லுவர்.

ஆன்மீகத்தைஒன்றும் படிக்காத பாமரனுக்கும் கொண்டு சென்றவர்.

அவரை இடத்தை யாரும் நிரப்ப முடியாது.