முதன் முதலா வாட்டர் கலர் பயன்படுத்தும் போது பிரஷ் ஓட்டம் கோட்டு மேல் ஒழுங்காக வராமல் பிசிறு தட்டும். அந்த குறையை போக்குவதற்கு அந்த கோட்டை திரும்பவும் கறுப்பு பேனாவால் திருத்திவிடுவேன். அதுவும் படம் நன்றாகக் காய்ந்த பிறகு. இல்லாவிட்டால் அது ஈரத்தில் பக்கவாட்டில் படரும். அதனால அதுதான் ஃபினிஷிங் டச்.
பிற்காலத்துல Ink & water color டெக்னிக்-னு ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இது பெரும்பாலும் ஸ்பாட் பெயிண்டிங்கில பயன்படுமாம். முதல்ல தண்ணியிலே கரையாத மையால் படத்தை வரைந்து கொண்டு பிறகு அங்கங்கே வாட்டர்-கலரை வைத்து ஒரு வாஷ் கொடுத்து விடவேண்டும்.
இது நான் ஆரம்பத்துல சொன்னதுக்கு நேர் எதிர். இங்கே முதல்ல இங்க் அப்புறம்தான் வர்ணம். வாட்டர்ஃப்ரூஃப் இங்க் ஆனதுனால தண்ணீர் படும்போது அழியாது,பிசிறடிக்காது. இந்த முறையை பயன்படுத்தி Terry Banderas என்பவர் அமர்களமா போட்டுத் தள்ளறார்.
நாமும் அப்படி ஒரு படத்தை போட்டு பார்க்கலாம் அப்படின்னு வரஞ்சதுதான் இந்த குருந்தமலை(காரமடை அருகே)மேலே உள்ள பாலதண்டாயுத பாணி கோவிலுக்கு சற்று கீழ் மட்டத்தில் இருக்கும் இந்த கங்காதீஸ்வரன் கோயில்.
தண்ணீர்ல கரையாத இங்க் இப்போது பல water-proof ஜெல் பேனாக்களாக வருகிறது. முதலில் அப்படிபட்ட பேனாவில் வரைந்து கொண்டு பின்னர் வர்ணம் கொடுத்தேன். இளம் பச்சை வர்ண ஹாண்ட்-மேட் பேப்பரில் வரையப்பட்டது. அதனால்தான் அந்த சுவற்றின் வெள்ளை மிக எடுப்பாக தெரிகிறது.
இது நேரில் அமர்ந்து வரைந்ததல்ல, புகைப்படத்தின் துணை கொண்டு வரையப்பட்டது. ஹாண்ட்-மேட் வரைதாளானதால் கலர் வாஷ் செய்யும் போது உடனே நீரை உறிஞ்சி வர்ணங்கள் சீராக பரவுவதை தடுத்தது. இந்த பிரச்சனையை wet-in-wet முறையில்-அதாவது முன்பே ஈரப்படுத்தி பின்னர் வர்ணத்தை கொடுப்பது-ஓரளவு சமாளித்தேன்.
ஆனால் ஹாண்ட்-மேட் தாளின் சுர சுரப்புத் தன்மை பாறைகளின் கரடு முரடான தன்மைக்கு உதவி செய்தது என்று நினைக்கிறேன்.
டெர்ரியின் வர்ணக்கலவைகளை பார்க்கும் போது அவர் மிக உயர்ந்த தரமுள்ள வர்ணங்களையும் வரைதாளையும் உபயோகிப்பவர் போல இருக்கு. ஹூம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.
அது என்னமோ தெரியவில்லை. e-snip-ல் வலையேற்றிய அன்றைக்கே இந்த படத்தை முதல் பக்கத்தில் (Home-page) போட்டு பெருமை படுத்தி விட்டார்கள். எல்லாம் முருகன் செயல் !

3 comments:
படம் அருமையா இருக்கு. அதுவும் மேலே இருந்து பார்க்கும்போது கண்ணில் படும் காட்சி நல்லாவே இருக்கு.
இங்கே நியூஸியில் நிறைய ஆர்ட்டிஸ்ட்டுகள் போட்டோவைத்தான் வச்சு வரையறாங்க. விற்கும் பெயிண்டிங்குகளுடன் அந்த போட்டோவும் சேர்த்துத் தர்றாங்க.
இந்த ஹேண்ட்மேட் தாள் நல்லா இருக்குன்னு ஒரு காலத்துலே (பூனாவில் இருக்கும்போது) அதைத் தயாரிக்கும் இடத்தைத் தேடிப்போய் வாங்குனது நினைவுக்கு வருது. மினிமம் 50 வாங்கணுமுன்னு சொல்லிட்டாங்க.
அதுக்கப்புறம் நண்பர்கள் எல்லாருக்கும் பிறந்தநாள், தீபாவளி, பொங்கல்லுன்னு வாழ்த்துக்களை வரைஞ்சு 'தள்ளி'யாச்சு:-)
எப்பவாவது கையில் கிடைத்தால் படத்தை ஸ்கேன் செஞ்சு போடறேன். ஆனால் உங்க அளவுக்கு சூப்பரா எல்லாம் இருக்காது. ரொம்பச் சுமார் ரகம்தான் என்னது.
நல்வரவு துளசி மேடம்,
//உங்க அளவுக்கு சூப்பரா எல்லாம் இருக்காது. ரொம்பச் சுமார் ரகம்தான் என்னது //
என்னது போய் சூப்பர்ன்னு சொல்லிட்டீங்களே. ரொம்ப சாதாரணம் இது. தட்டுத் தடவி ஆர்வம் அணைஞ்சு போகமா இருக்க இப்படி பதிவெல்லாம் போட்டுக்கிட்டு இருக்கேன். நீங்களும் போட ஆரம்பிங்க. அப்புறம் தானா சூப்பர் ஆயிடும் :))
வணக்கம் கபீர்ன்பன் , வாழ்க வளமுடன்.
மிக அருமையாக இருக்கிறது ஓவியம்.
Post a Comment