ஆனால் சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு பாக்கு மரபட்டையை வெற்றிகரமாக disposable plates களாக மாற்றும் CFTRI தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிக் கொண்டிருக்கிறது. சுற்று சூழலுக்கு ஊறு விளைவிக்காத எளிய சிறு தொழில் முனைவர்களுக்கானது .
இதை முதன்முதல் -அறிமுகப்படுத்திய காலத்தில் -மைசூரில் கண்டபோது சென்னையில் இது ஒரு அரிய பொருள். மைசூரிலிருந்து ஒரு நான்கைந்து தட்டுகளை மாதிரிக்காக கொண்டு சென்றேன்.அப்புறம் சிறிது நாள் அப்படியே இங்குமங்குமாய் கிடந்து சீரழிந்து கொண்டிருந்தது. ”இதை தூக்கிப் போட்டுறேன்” அப்படீன்னு அம்மா பயமுறுத்தியதும், “அதுல வால்-ஹேங் செய்யலாம், தூக்கிப் போடாதே” ன்னு என்னையறியாமல் ஒரு பதில் சொல்லி வைத்தேன். அப்புறம் சொன்னதை நிஜமாக்க வேண்டியக் கட்டாயம். நம்ம கிட்ட இருக்கவே இருக்கு பெயிண்ட் பிரஷ்.
அதைத்தான் கீழே பார்க்கிறீர்கள். எல்லாம் ஆயில் பெயிண்ட்.
இப்போ அதை தொங்க விடுவது எப்படி ? ரொம்ப சிம்பிள். ஒரு கனமான நூல் துண்டை U -வை திருப்பிப் போட்ட மாதிரி வைத்து பின் பக்கத்தில் இன்சுலேஷன் டேப் வைத்து ஒட்டி விட்டேன். இந்த தட்டு ரொம்ப லைட்-வெயிட். அதனாலே எங்க வேணுமானாலும் சுலபமா தொங்க விடலாம்.
ஜப்பானியப் பெண்னோ சீனப்பெண்ணோ துணி தைப்பது போல ஒரு காலண்டர் படம். (படம் கொஞ்சம் அவுட் ஆஃப் ஃபோகஸ், மன்னிக்கவும்)
தென்னாட்டுடைய சிவனே போற்றி- எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இந்த தட்டுகள் செய்யும் எந்திரத்தை இயக்க மனக்குன்றிய சிறுவர்களும் நல்ல முறையில் கற்று உற்பத்தி செய்யும் முறையை கற்றுக் கொள்ளலாம்.
வாழை மரம், தென்னைமரம் பாக்குமரம் இப்படி எதை எடுத்தாலும் எத்தனை விதமா மனிதனுக்கு பயன்படுது! மனுஷனாகப் பிறந்து நாம் மாத்திரம் சமூகத்துக்கு ஏதாவது விதத்தில் பயன்படுகிறோமா ?
3 comments:
கபீர்,
இது வரை கேள்விப்படாத வித்தியாசமான மீடியத்தில் ஆயில் பெய்ண்டிங் அருமை. செய்திகளுக்கும் நன்றிகள்.
//மனுஷனாகப் பிறந்து நாம் மாத்திரம் சமூகத்துக்கு ஏதாவது விதத்தில் பயன்படுகிறோமா ? //
முடிவில் சிந்தனைக்கு ஒரு கேள்வி ...
வாங்க சதங்கா,
//இது வரை கேள்விப்படாத வித்தியாசமான மீடியத்தில் ஆயில் பெய்ண்டிங்....//
சோதனை முயற்சிகளில் சில நன்றாக வருகின்றன. பல வராமல் போவதுமுண்டு. இந்த பாக்குபட்டை தட்டில் உள்ள ஒரு சிறு குறை; தொங்க விடும் போது வட்டமாக இருந்த தட்டு புவிஈர்ப்பினால் நாளாவட்டத்தில் கொஞ்சம் நீள் வட்ட(ஓவல்) வடிவம் ஆகிவிடுகிறது. ஆகையால் அதை தொங்கவிடாமல் ஷோ-கேஸில் வைப்பதே உசிதம். அப்போது கீழே ஸப்போர்ட் இருப்பதால் வடிவம் மாறுவதில்லை.
இதை பதிவிலேயே குறிப்பிட எண்ணியிருந்தேன். தங்களது பின்னூட்டத்தால் நினைவுக்கு வந்துவிட்டது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
very nice paintings.
Post a Comment