படம் பார்த்து கதை சொல்
அம்மாவுக்கு செல்லம்
என் செல்ல அம்மா, தங்கக் கட்டி அம்மா ......
டேய் ! என்ன விஷயம் சொல்லு ...
என் ஆசை அம்மா ...உனக்கு என்னை ரொம்பப் பிடிக்கும் தானே ?
என்னடா ? என்ன வேணும் இப்போ ?
என் பிரண்ட்ஸ் எல்லோரும் கபடி மேட்ச் பார்க்க போறாங்க, நானும் போகட்டுமா?
எந்த பிரண்ட்ஸ் ?
சாமி, தில்லை, நாகு .....
எங்க ? எவ்வளவு தூரம் ?
இங்கதாம்மா, மேட்டுத் தெரு கோடியில, முள்ளியாத்து மணல்ல
இருட்டுறதுக்குள்ள வந்திடுவியா ?
ஓ ...!
சரி சரி , நல்லா சட்டையா பாத்து போட்டுக்கிட்டு போ, பரண் மேல பொரி உருண்டை இருக்கு. பிரண்ட்ஸ்க்கும் சேர்த்து கொண்டு போ.
சரிம்ம்மா ......என் செல்ல அம்மா ...
சிட்டென பறக்கிறான் குட்டிப்பையன்.
சிறுவனின் முகத்தில் ஒரு கொஞ்சலான புன்னகை.
அதே சமயம் வேலையில் ஆழ்ந்திருக்கும் அன்னையின் முகத்தில் ஒரு சந்தோஷமான நமட்டு சிரிப்பு இரண்டையும் ஒரு சேர கொண்டுவர வேண்டும் என்பதே இந்த படத்தின் பெரிய சவால்.
அதனால் படத்தில் பின்னணி போன்ற வேறு பல விஷயங்களில் அதிக கவனம் காட்டவில்லை.
முழு படமும் கீழே .
No comments:
Post a Comment