தமிழ் நாட்டில் மாணிக்கவாசகர் சிவபெருமானை தலைவனாக வைத்து நாயகி பாவத்தில் திருக்கோவையார் பாடியுள்ளார். இது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவதற்கான ஏக்கப்பொருளாகும். இறைவனைத் தேடுதலால் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் எனப்படும்.
அவர் போலவே கலிங்கப் பகுதியான ஒடிஷாவில் வாழ்ந்த ஜெயதேவரும் கண்ணனை நினைத்து உருகி பாடிய பாடல்கள் "கீதகோவிந்தம் " என்ற பெயரில் வடமொழி பக்தி இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றது.
அவருடைய பாடல்கள் சிலவற்றுக்கு உருவகம் கொடுத்து நாற்பது அல்லது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாட்காட்டி வெளிவந்திருந்தது.
வெறும் கோட்டு ஓவியமான அச்சித்திரங்களின் அழகில் மயங்கி ஒரு சிலவற்றை நான் ஒரு வரைபுத்தகத்தில் என் விடுமுறை நாட்களின் போது வரைந்திருந்தேன். அப்புறம் அது எங்கு போயிற்றோ, மறந்தே போனேன்.
சென்ற ஆண்டு திடீரென்று என் சகோதரிக்கு அப்புத்தகம் கிடைத்து அதிலிருந்த சில படங்களை வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பி வைத்தாள். மிகவும் கசங்கிப் போயிருந்த தாள்கள், கோணலான காமிரா கோணம் ஆனாலும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
உடனே அதை மடிக்கணினிக்கு மாற்றி அதை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். அதன் விளைவே கீழே உள்ள படங்கள். மென்பொருள் Paint 3D.
No comments:
Post a Comment