Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, January 12, 2010

இந்தியாவின் இரண்டு முகங்கள்

இந்தியாவுக்கு இரண்டு முகம் தானா? நூறுகோடி முகம் இல்ல அப்படீங்கறது காதுல விழுது. நான் வரஞ்சு வச்சிருக்கிற ரெண்டு முகங்களை சொன்னேன்.

இந்த இடுகையில் இரண்டு முகங்களை பார்ப்போம். ஆமாங்க, புது வருஷ போனஸ் ! :))

வழக்கமா ஒரு இடுகைக்கு ஒரு சித்திரம் காட்றதுதான் நம்ம பழக்கம். அடுத்த இடுகைக்கு ஸ்டாக் வேணுமே! :)

சில அற்புதமான மனிதர்களை நீங்க சந்திக்கணுங்கறதுக்காக போன பதிவுல சித்திரம் காட்டாததால அதுக்கும் சேர்த்து இப்போ ரெண்டு.

முதல்ல ஒரு ஷெர்பா முகம். ஷெர்பாக்கள் மலைஜாதி மக்கள் கடும் உழைப்பாளிகள். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஏறுவார்கள். பிராணவாயு குறைவினால் நமக்கு மூச்சுத் திணறினாலும் அவர்களுக்கு திணறாது என்றல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கடும்குளிர் காரணமாகவோ என்னவோ அவங்களோட கண்கள் இடுங்கி இருக்கும்.


”ஹாய்! லீஈஈ, அப்படீன்னா அந்த சைனாக்காரன் ’வாயெல்லம் பல்லா’ சிரிப்பான், அப்போ அவனோட கண்ணு காணாமப் போய்டும், அதை வேடிக்கைப் பாக்கறதுக்காகவே ஹாய் லீஈஈ அப்படீன்னு அப்பப்ப அவனை கூப்பிடுவேன்” என்று என்னுடைய பழைய பாஸ் வேடிக்கையாக சொல்வதுண்டு.

சீனதேசத்தவர்கள், ஷெர்பாக்கள், கூர்க்காக்கள் யாவரும் மங்கோல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

HB பென்ஸிலால் வரையப்பட்ட படம். ஹிந்து பத்திரிக்கையில் வெளியாயிருந்த அந்த மனிதனின் வர்ணப்படத்தை பாதுகாக்காமல் விட்டு விட்டேன். இருந்திருந்தால் அதுவும் ஒரு நல்ல பயிற்சியாக இருந்திருக்கும்.

---------------------------

சமீபத்துல விளம்பரம் ஒண்ணுல வந்திருந்த இந்த ராஜாஸ்தானத்து மனிதனுடைய முகமும் ’சித்திரமா வரை... வரை’-ன்னு தூண்டியது. கைக்கு கெடச்சுது பால்பாயிண்ட் பேனாதான். சான்ஸ் வுட்டா கெடைக்காது, ஏன்னா நானிருந்தது ஆசுபத்திரி வார்டு. சாப்பிட போயிட்டு வர்றதுக்குள்ள பேப்பர் அங்கேயே கிடக்குமா இல்லே வேறெ யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களான்னு தெரியாது. கடைசியிலே நான் பயந்த மாதிரியே ஆயிடுச்சு. நடுவிலே சின்ன ப்ரேக்ல எங்கேயோ போயிடுச்சு. ஒருவழியாக ஊகம் பண்ணி முண்டாசை முடிச்சாச்சு. ஆனாலும் முழு திருப்தி வரலை. போவட்டும், பத்தோட பதினொண்ணு :))


என்னதான் சொல்லுங்க படிக்காத ஜனங்கோளோட கடுமையான உழைப்பும் எளிமையும் தாங்க இன்னும் இந்த நாட்டை வாழவச்சுக்கிட்டு இருக்கு. அத இந்த ரெண்டு முகமே சொல்லுது.

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

இது வரை அறியாத தகவல்

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

Priya said...

வாவ், ரிய‌லி சூப்ப‌ர்ப்!!!

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

thamizhparavai said...

ரொம்ப நல்லா இருந்தது சார்...
ரெண்டாவது ஓவியம் எனக்கு மிகப் பிடித்திருந்தது....

KABEER ANBAN said...

@ sanghavi : நன்றி, தங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்

@ Priya : சூப்பர் நன்றி :)இனிய பொங்கல் வாழ்த்துகள்

@ தமிழ்பறவை :

//ரெண்டாவது ஓவியம் எனக்கு மிகப் பிடித்திருந்தது....//

அது உங்களோட ஃபேபரைட் பால்பாயிண்ட் பேனா ஆச்சே!. தமிழ்மண போட்டியில ரமணர் படம் ரெண்டாவது சுற்றுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துகள்,
பொங்கல் நல்வாழ்த்துகள்.

dharshini said...

படங்கள் மிகவும் அருமை.. குறிப்பாக இரன்டாவது மிக மிக அருமை.
அதுவும் பால்பாயின்ட் பேனாவினால்... சூப்பர் கபீரன்பன் சார்.
கொஞ்சம் பிஸியாக இருந்ததினால் அடிக்கடி வர முடியவில்லை.

KABEER ANBAN said...

@தர்ஷிணி

//கொஞ்சம் பிஸியாக இருந்ததினால் அடிக்கடி வர முடியவில்லை//

உங்களுக்கு மட்டுமா ? எனக்கும்தான். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி