Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, August 13, 2016

சித்திரமும் மவுஸ் பழக்கம்-4


சமீபத்தில் நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரில் ஒரு பள்ளி மாணவர்களுக்கான கதைக்கு சித்திரம் வரைந்து கொடுத்தேன்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதே அதன் தாத்பரியம்.

தம்பி மீது அபாண்டமாக பழி சுமத்திய அண்ணனுக்கு  அன்றே பள்ளியில் ஒரு அபாண்டமான பழி வந்து சேர்கிறது. தாயின் அன்பு போதனையால் அண்ணன் தவறை உணர்ந்து மன்னிப்பு கோருகிறான். இது தான் கதை.

இதற்கான படங்களை ஒரு காமிக் ஸ்டிரிப் வடிவத்தில் கறுப்பு வெள்ளையில் வரைந்து அனுப்பிய பிறகு அதற்கு  ஃபோட்டோ ஷாப்-பில் வர்ணம் பூசி பார்க்கலாமே என்று தோன்றியது. எனக்கு புதியது அதனால் ஆர்வம் அதிகம். அதில் பல ஜித்தர்கள் whatsapp--ல் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

இது வரை M S Paint-ல்  மட்டும்  கொஞ்சம் பழகியிருந்தேன். ஆனால் வித விதமான பிரஷ்கள், எளிமையான நுட்பங்கள், பல படங்களை ஒன்றாக்கி செய்யும் வித்தைகள் எல்லாவற்றையும் போட்டோ ஷாப்பில் செய்யலாம் என்று கேள்விப்பட்டு அதை ஒருவர் மூலம் என் கணினியில் தரவிறக்கம் செய்து கொண்டேன்.

முதலில் கறுப்பு வெள்ளைப் படம் :


பின்னர் இதே படத்தை பிரித்து தனித்தனி படங்களாக  ஃபோட்டோ ஷாப் மூலம்  வர்ணம் பூசினேன். அதன் விளைவு



ஓவியம் வரையத் தெரியாது  ஆனால் நல்ல வர்ண ரசனை உண்டு     என்பவர்களுக்கும் கூடவே பொறுமையும் இருப்பவர்களுக்கு  இது ஒரு நல்ல தொழில் நுட்பம். குறிப்பாக விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கு இதன் தேவை அதிகம் என்று நினைக்கிறேன்.  


( click the pictures  in larger size)

எனக்கு இதில் தென்பட்ட வசதிகள் என்ன வென்றால்  சுலபமாக  வேண்டாத பகுதிகளை வெட்டி எடுப்பது, எல்லைகளை குறிப்பிட்டு அதனுள் வர்ணங்களை நிரப்புவது,  வர்ணத்தை வெவ்வேறு அடர்த்தியில் பூச முடிவது போன்ற இவ்வசதிகள் MS Paint -ல் கிடையாது. கூடவே cloning smudging  போன்ற வசதிகளும் உண்டு.

ஆனால் ஒரு கிரேயான் அல்லது வர்ண பென்சில் துணையுடன் 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் முடிய வேண்டிய காரியத்திற்கு மணிக்கணக்காக  மெனக் கெட வேண்டுமா என்று தோன்றுகிறது.

ஏதேனும் காரணத்தால் மூலப்பிரதி கெட்டுப் போயிருந்தால் அதை சீர்திருத்துவதற்கு இதைப் போன்ற மென்பொருட்கள் கண்டிப்பாக பயன்படும்.


8 comments:

kankaatchi.blogspot.com said...

உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது எவ்வளவோ மென்பொருட்கள் வந்தாலும் கையால் வரைவதுதான் இன்பம் எனக்கு .ஆனால் வரைந்த ஒரு படத்தை வைத்துக் கொண்டு கொண்டு நாம் நூற்றுக்கணக்கான மாறுதல்களை கணினி மூலம் செய்து அசத்தலாம்.அதை எதோ என் சுய புத்தியைக் கொண்டு அதை பயன்படுத்தி என்னுடைய வலை பதிவுகளில் பயன்படுத்தி இருக்கிறேன்

KABEER ANBAN said...

உண்மைதான் பட்டாபி சார். நம்முடைய தவறால் கெட்டுப்போன பாகங்களை சீர் செய்யவும் பழைய படங்களை புதுப்பிக்கவும் கணினி மென்பொருட்கள் பெருமளவுக்கு உதவி செய்கின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

kankaatchi.blogspot.com said...

சார் என்னுடைய மவுத்தார்கன் இசை வீடியோக்களை நீங்கள் காணவில்லையா. ? 126 வீடியோக்கள் யு டியூபில் ஏற்றியுள்ளேன். link
pattabiraman-mouthorgan vedios

KABEER ANBAN said...

ஓ! கேட்டிருக்கேனே. You Tubeக்கு பதிலாக Music clouds-ல் ஆடியோ மட்டும் வலையேற்றினால் ஃபைல் சைஸ் குறையுமென்றும் கூறியிருந்தேனே! அது தங்களைப் போலவே சுய ஆர்வத்துடன் முயல்பவர்கள் தங்கள் படைப்பை பகிர்ந்து கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஃபைல் சைஸ் குறைவதால் அப்லோட் டௌன்லோட் வேகமாக இருக்கும். முயன்று பாருங்கள். நன்றி

கோமதி அரசு said...

அழகான படங்கள். அம்மாவின் சாந்தமுகம் அழகாய் இருக்கிறது. காதை திருகுவது ஆசிரியரா ? . பாடத்திட்டம் சொல்லும் கருத்தும் ஓவியமும் அருமை.

KABEER ANBAN said...

// காதை திருகுவது ஆசிரியரா ? //
இல்லை மேடம். திருகப்படுவது தம்பியின் காது, அவன் அன்னையினால். அண்ணன் குற்ற உணர்ச்சியால் பார்த்துக் கொண்டிருக்கிறான். பள்ளியில் நிகழ்ந்ததை இங்கே பிரசுரிக்கவில்லை.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

bravesadhubaba said...

Umesh super. I can see glimpses of gopulu
ஏன் விகடன் குமுதம் போன்ற பத்திரிகை களுக்கு படம் வரையக் கூடாது?
GP

G.Shankar said...

Supeb