சுமார் பத்து வருடங்களுக்கு முன் வரையப்பட்ட ஒரு சித்திரம் பழைய புத்தகங்ளை புரட்டிய வேளையில் கையில் அகப்பட்டது. ஹாங்காங் ஓட்டல் அறையில் பேஸ்டல் வர்ணத்தினால் வரையப் பட்டது. ஒரு சீனத்து பத்திரிக்கை கை வினைத் தாெழில் பற்றிய விளம்பரம் ஒன்றின் படம் என்று நினைக்கிறேன்.
சீனாவின் சரித்திரத்தில் குதிரைகளுக்கு தனி இடம் உண்டு. கிமு 104 ல் வூ என்ற அரசன் 2000 மைல்களுக்கப்பால் படைகளை அனுப்பி சுமார் 3000 குதிரைகளை மத்திய ஆசியாவிலிருந்து பிடித்து வர செய்தான். அவைகளில் பாதிக்கும் மேலே வழியிலே இறந்து விட்டன. இந்த வெற்றியும் இரண்டாம் முயற்சியில் தான் கிட்டியது. உலகத்தில் குதிரைகளுக்கான பாேர் இது ஒன்றுதானாக இருக்கும்.
குதிரையின் பெயரில் ஆண்டுகளுக்கு பெயரிடுகையில் ஒரு ஆண்டை ஒதுக்கி உள்ளனர் சீனர்கள். கடந்த 2014 ஆம் ஆண்டு Year of Horse ஆகும். இனி மீண்டும் 2026 ல் தான் அடுத்து வரும்.
இனி குதிரைகளுக்கே உரிய சில விஷயங்கள்.
பிராணிகளிலே மிகப்பெரிய கண்கள் குதிரைகளுடையதாம். அவைகளால் தம்மைச் சுற்றி 360 டிகிரியிலும் பார்க்க முடியும்.
அவற்றின் ஆயுள் சராசரியாக 20 முதல் 25 ஆண்டுகள். ஆனால் அறுபது வயது வரை வாழ்ந்த குதிரைகளும் உண்டு.
அவைகளின் குளம்புகள் ஏற்பட காரணமாயிருக்கும் புரதங்களும் மனிதர்களின் நகங்களில் உள்ள புரதமும் ஒரே வகையை சேர்ந்தவை.
நின்று காெண்டே தூங்கும் பழக்கமுடைய குதிரைகள் ஓட ஆரம்பித்தால் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் ஓட வல்லவையாகும்.
நம்பிக்கைக்கும் ஞாபக சக்திக்கும் உடல் வலிமைக்கும் பெயர் வாங்கிய குதிரைகள் ஒரு வகையில் ஏமாளிகளும் கூட. அதனால் தான் சீனத்துக் கதைப்படி தேவ லாேகத்து பெரும் ஆற்றை கடக்கும் பாேட்டியில் ஏழாவது இடத்திற்கு அதுத் தள்ளப்பட்டது.
ஹும் ! மனித உண்மைகள் பிராணிகளை காரணப் படுத்தி நமக்கு உணர்த்தப் படுகின்றன.

4 comments:
The highest race speed recorded over two furlongs is 70.76 km/h (43.97 mph) and was achieved by Winning Brew trained by Francis Vitale (United States), at the Penn National Race Course, Grantville, Pennsylvania, United States, on 14 May 2008.
Courtesy: guinness book of records.
subbu thatha
மிக்க நன்றி சுப்பு சார்.மேலும் பல நல்ல தகவல்ளை தந்ததற்கு நன்றி. மீண்டும் வருக.
ஹும் ! மனித உண்மைகள் பிராணிகளை காரணப் படுத்தி நமக்கு உணர்த்தப் படுகின்றன.//
உண்மைதான்.
ஓடி கொண்டு இருக்கும் குதிரை படத்தை வீட்டில் வைத்தால் நல்லது என்று எல்லோரும் ஓடும் குதிரை படத்தை வீட்டில் மாட்டி வைத்து இருக்கிறார்கள்.
ஓருத்தரை ஒருத்தர் முந்திக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கிறார்கள் தவறாக புரிந்து கொண்டு.
நல்வரவு கோமதி மேடம்
///ஓடி கொண்டு இருக்கும் குதிரை படத்தை வீட்டில் வைத்தால் நல்லது என்று எல்லோரும் ஓடும் குதிரை படத்தை வீட்டில் மாட்டி வைத்து இருக்கிறார்கள்.///
பல வீடுகளில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது தெரியாது.
புது தகவலுக்கும் வருகைக்கும் நன்றி
Post a Comment