வைனதேயன் என்பது கருடனுடைய வடமொழி பெயர். பறவைகளில் ராஜா. கருடன், கழுகு பருந்து என்று பல வகையான பெயர்களில் காணப்பட்டாலும் அவையாவும் ஒரே இனத்தவை. ஆயிரம் அடி உயரே பறக்கும் போதும் பூமியில் அவைகளின் பார்வை இரைக்காக தம் கூரிய பார்வையால் தேடிய வண்ணம் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அவைகள் சராசரி ஒரு மணியில் 40 முதல் 50 கிமீ வேகத்தில் பறக்கக் கூடியன. ஆனால் இரையைக் கண்டவுடன் மணிக்கு 120 கிமீ.க்கும் அதிகமான வேகத்தில் பாய்ந்து கால்களினால் பற்றிக் கொண்டு பறந்து விடும். அவைகளின் கூரிய நகங்களின் பிடி மனிதர்களின் பிடியை விட பத்து மடங்கு பலமானது.
இப்பறவைகள் எந்த ஒரு இறந்த சடலத்தையும் உணவாக் கொள்ளுபவை. அதனால் சுற்று சூழல் பாதுகாப்பில் மிக முக்கிய இடத்தை வகிப்பனவாகக் கருதப்பட்டு அவைகளின் பாதுகாப்பிற்காக பல நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதனால் தான் நம் முன்னோர்கள் கருடனை பூஜித்து வந்தனர் போலும்.
சரி, ஓவிய வி ஷயத்திற்கு வருவோம். இந்தப் படம் வரைய பயன் படுத்தப்பட்ட பென்சிலின் நுனி உளி போன்று தட்டையானது. இதை flat tip என்று சொல்வதுண்டு. இதன் பயன், விளிம்புகள் அழுத்தமாகவும் உட்பக்கங்கள் சற்று அழுத்தம் குறைந்தும் இயற்கையாக ஔிப் பரவலை ஒரே கோட்டில் ( stroke ) வெளிப்படுத்தும். இதனால் தனியாக shading செய்ய வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக அலகு, இறக்கை போன்றவையெல்லாம் ஒரே stroke ல் வரையப்பட்டவைதாம்.
குறிப்பு : பென்சில் கூராக இருந்தாலும் அதை சாய்த்து வரைபட தாளிற்கு இணையாக பிடித்தும் இதே மாதிரி வரையலாம்.
இந்த பதிவு முழுவதுமாக ஆன்டிராய்ட் கைப்பேசி மூலம் சுட்டு, தட்டச்சு செய்யப்பட்டு வலையேற்றப் பட்டது. படம் வரைவதற்கான நேரம் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவு. தட்டச்சு செய்து வலையேற்றுவதற்கான நேரம் சுமார் இரண்டரை மணிகள்!

5 comments:
நல்ல உழைப்பு. பொறுமையாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
கழுகைப் பற்றிய விவரக் குறிப்புகள் அற்புதம். 'கழுகும் சுற்றுப்புறப் பாதுகாப்பு சூழலும்'என்பது மாறுப்ட்ட பார்வை. கழுகின் தூரத்து தீட்சண்ய பார்வையும் பிரசித்தம் என்று நினைவிலாடியது.
நீங்கள் சொல்லவில்லை என்றால், இந்த வரைதலைத் தாண்டிய வலையேற்றத்திற்காக நீங்கள் எடுத்துக் கொண்ட சிரமம் தெரிந்திருக்காது. இந்தத் தொழில்நுட்பம எல்லாம் அடியேன் அறியேன். ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்ள வேப்ண்டும் என்ற ஆவல் உண்டு.
சித்திரத்தைப் பொறுத்தமட்டில் கழுகின் கண், அதன் தாடைப் பகுதி, வளைந்த மூக்கு இந்தப் பகுதியையெல்லாம் வரையும் பொழுது மிகுந்த கவனம் தேவை என்று பு9லப்பட்டது. தலைத் திருப்பிய அந்த போஸ் இல்லையெனில் இதெல்லாம் கூட கவனத்திலிருந்து தப்பியிருக்கும்.
தங்கள் திற்மைக்கு வாழ்த்துக்கள், கபீரன்ப!
நல்வரவு கீதா மேடம்
என் உழைப்பெல்லாம் ஆண்ட்ராய்ட்-ல் வலையேற்றம் செய்ததுதான்.:))
கழுகு விஷயத்தில் ஒன்றும் இல்லை.
பாராட்டுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி.
நல்வரவு ஜீவி சார்
மிகவும் இரசித்து பாராட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
தங்கள் ஆவல் யாவும் புத்தாண்டில் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நன்றி
கழுகு படம் நன்றாக இருக்கிறது.
கழுகு பற்றிய செய்தியும் அருமை.
Post a Comment