இந்த ஒளி -நிழல் விளையாட்டில் அடிக்கடி மனம் இழப்பவன் நான். நேற்று அலுவலகத்தில் கணிணியில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவன் தற்செயலாக கண்களை விலக்கி எதையோ எடுக்கப் போன எனக்கு சட்டென்று கண்ணைக் கவர்ந்தது மேசை மேல் என் மூக்குக் கண்ணாடி. அது சன்னல் வழியே வந்த சூரிய வெளிச்சத்தில் காட்டிய நிழலாட்டத்தைத் தான் கீழே காண்கிறீர்கள்.
பள்ளிகூடப் பாடத்தில், ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்தில் ஒளி பாயும் பொழுது ஏற்படும் ஒளி விலகல் ஒளிச் சிதறல் போன்றவற்றைப் படித்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் ஒரு சேர கண்டபோது விஞ்ஞானம் வெளிவரவில்லை. உள்ளே இருந்த ஓவியன் வெளிவந்தான். அதை அப்படியே சில நிமிடங்களுக்குள் பிடித்துவிட வேண்டும் என்று கைகள் பரபரத்து வரையப் பட்ட சித்திரம் இது.
ஃபிரேம், அதனுடைய நிழல் இரண்டும் வெவ்வேறு வகையில் விலகி செல்கின்றன. நிஜத்தில் இரண்டு பக்க வளைவுகளும் வெவ்வேறு உயரத்தில் விலகி இருப்பினும் நிழலில் அவையிரண்டும் சங்கமித்திருக்கின்றன. அதைப் போலவே பொதுவாக நாம் டிரான்ஸ்பரண்ட் என்று கருதும் லென்ஸின் ரீடிங் லென்ஸ் விளிம்புகள் நிழலில் கருப்பாக அரைவட்ட வடிவில் (வெளிச்சத்தை அனுமதிக்காது) இருக்கிறது. ஆனால் கண்ணாடியின் நுனிப் பகுதி அதிக வெளிச்சச் சிதறலை உண்டாக்கி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்தி இருப்பதைக் காணலாம். ஃபிரேமும் நிழலும் லென்ஸின் வழியே பார்க்கப்படும் போது ஒளி விலகலால் நேர்கோடாக இல்லாமல் துண்டித்து இருப்பன போல் காணப்படுகின்றன.
படத்தை அலைபேசியில் படம் பிடித்து போட்டிருக்கிறேன்.
பல பெரும் ஓவியர்கள் தண்ணீர் துளி, கண்ணாடி ஜாடி போன்றவற்றை மிக தத்ரூபமாக வரைந்திருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். இது எனது முதல் முயற்சி. புது வருடத்தில் புதிய முயற்சியும் வரவேற்கப் படவேண்டிய ஒன்று தானே !
வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

4 comments:
அற்புதம்
வாழ்த்துக்கள்
நல்வரவு உமா மேடம்,
பார்த்து ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி
உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/
நல்வரவு மனோ மேடம்
தங்களுக்கு இந்த வலைப்பூ பிடித்திருப்பதும் அதை பலருக்கு சொல்லி மகிழ்சியில் ஆழ்த்தியதற்கும் மனமார்ந்த நன்றி
Post a Comment