Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Tuesday, August 31, 2010

வீட்டைக் கட்டிப்பார் : மௌஸ்-ல தாங்க!

கூகிள் ஸ்கெட்ச்-அப் (sketch up)அப்படிங்கற மென்பொருளை மேலே இருக்கிற தலைப்புல முத்துலெட்சுமி மேடம் காமிச்சு குடுத்தாலும் குடுத்தாங்க அடுத்த ஒரு வாரம் அதை வச்சு பொழுது போறது தெரியாம படம் படமா போட்டுக்கிட்டிருந்தேன்.

கூகிள் கொடுத்த விளக்கப்படம், மின்புத்தகம் எல்லாம் ரொம்ப சுலபமாக இருந்தது.

கிட்டத்தட்ட முழு கட்டிடம், ஃபினிஷ்ங் எல்லாத்தையும் அச்சா முன்னாடியே எஞ்சினியருக்கும் மேஸ்திரிக்கும் தச்சு வேலைசெய்றவங்களுக்கும் அதுக்கான அளவுகளோட போட்டு காமிக்கலாம்.

எந்த எடத்துல கண்ணாடி வரணும், பளிங்கு ஸ்லாப் வரணும், வெளிப்பக்கத்து சுவர் எப்படி பினிஷ் பண்ணனும் எல்லாத்தையும் முன்னாடியே முடிவு பண்ணிக்கலாம்!! அப்போ சேமிச்சு வச்ச படங்களை இப்ப பாருங்க.



உங்களுக்கு அடி, இன்ச் கணக்குதான் புரியும்னா அதிலேயே மேலே இருக்கிற படத்தை மாதிரி போட்டு காமிக்கலாம். இல்ல மீட்டர் மில்லி மீட்டர் கணக்குனா அதுக்கும் கூகிள் வழி பண்ணியிருக்குது. கீழே பாருங்க.




அது மட்டுமல்ல ஒவ்வொரு கோணத்திலேயும் எப்படி இருக்கும் என்கிறதையும் அப்படியே ஒரு சுழட்டு சுழட்டி காட்டலாம். நான் டிசைன் பண்ண பூஜா ரூமை அப்படியே கீழே ப்ளே பண்ணி பாருங்க.



முத்துலெட்சுமி மேடத்துக்கும் கூகிளுக்கும் இன்னொரு ஸ்பெஷல் டாங்கீஸ்.:)))))

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆக எனக்கும் நன்றியா .. நன்றிக்கு நன்றிங்க..
சூப்பரா செய்திருக்கீங்க.. பாரட்டுக்கள்..

புதுவீட்டுக்கு வாழ்த்துக்கள்..

சென்ஷி said...

:)

சூப்பர் டிசைன்!

KABEER ANBAN said...

நல்வரவு முத்துலெட்சுமி மேடம்

//ஆக எனக்கும் நன்றியா..//

வழிகாட்டியவருக்கு நன்றி சொல்லாம இருக்கலாமா :)

பாராட்டுகளுக்கு நன்றி

KABEER ANBAN said...

வருக சென்ஷி,

உங்களுக்கு பிடித்திப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி