Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Thursday, December 31, 2009

சித்திரமும் (நம்பிக்)கைப் பழக்கம்

இன்றைய இடுகையில் உங்களுக்கு, நான் எழுதிய சித்திரத்தைக் காட்டப் போவதில்லை. என்னையும் என் போன்ற பலரையும் வெட்கி தலைகுனியச் செய்யும் சில அற்புத கலாவிதர்களை அடையாளம் காட்டப் போகிறேன். என் வலைப்பூவின் தலைப்பையே இவர்கள் அர்த்தமற்றதாக்கி விட்டார்கள்.

அவர்களுக்கு நம்பிக்கை ஒன்றே துணை. சித்திரமும் (நம்பிக்)கை பழக்கம்

அவர்களை சந்திக்க இதோ இங்கே சுட்டவும் Mouth-Foot Painting Artists

கைகள் இன்றி, வாயினாலும் கால்களினாலும் இவர்கள் படைத்துள்ள காவியமாகும் ஓவியங்களை கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் சுயசார்புக்கான திட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் படைப்புகள் நாட்காட்டிகளாகவும், வாழ்த்துஅட்டைகளாகவும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி நமக்கு வேண்டியவர்களுக்கு அனுப்பி அவர்களின் உழைப்பின் மதிப்பை மக்கள் மத்தியில் பரவலாக்கலாம்.

புதிய ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக திகழட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

5 comments:

KABEER ANBAN said...

Please note :

If you wish to make online donation or Purchase use only Internet Explorer (IE) browser.

Firefox shows error ! Don't know about Chrome or safari

ஸ்வர்ணரேக்கா said...

லிங்க் தந்த்துக்கு நன்றி..
அருமையான படைப்புகள்..
order செய்திருக்கிறேன்... பார்ப்போம்.

KABEER ANBAN said...

நல்ல காரியம் செய்துள்ளீர்கள் ஸ்வர்ணரேக்கா.
பாராட்டுகள். புத்தாண்டு சிறப்பாக திகழட்டும்.

நன்றி

Priya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

KABEER ANBAN said...

நன்றி ப்ரியா,

2010 தங்களுக்கும் சந்தோஷமான ஆண்டாக மலரட்டும். வாழ்த்துகள்