இயற்கையின் விநோதங்களைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமான ஆச்சரியம்.
இம்முறை எனது ஆச்சரியம் இந்த பறவை அமர்ந்திருக்கும் இடம்.
பூக்கொத்துகளின் நுனியில் அது அமர்ந்து யாருக்கோ
“நீ எங்கே ஏஏ..எஎ என் நினைவுகள் அங்கே !”
என்று டி.எம்.எஸ் குரல் கொடுப்பது போல தோற்ற மளிக்கிறது. ? :)))
அந்த ’யாரோ’ கீழே இலை நடுவே ஒளிந்து கொண்டு போக்கு காட்டுவது போல் காணப்படுகிறது. மெல்லிய கிளை நுனியில் பறவையை தாங்க வேண்டுமானால் அந்தப் பறவை எவ்வளவு சிறியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆச்சரியம்.
ஒரு நிமிடத்துக்கு இருபதினாயிரம் முறை சிறகடிக்கும் தேன்சிட்டுப் பறவையின் அளவு நம் கட்டை விரல் அள்வு மட்டுமே!. [ இது தேன்சிட்டு அல்ல ]
இது நீர் வர்ணப் படம். பழைய காலண்டரில் வெளியானது. சிங்கிள் ஸ்ட்ரோக் முறைப்படி முயற்சி செய்யப்பட்டது. அதாவது பென்சில் ஸ்கெட்ச் இல்லாமல் நேரடியாக, இடத்திற்கு தகுந்த தடிமன் உள்ள ப்ரஷ்களை தேர்ந்து ஒரு போக்கிலேயே வரைவு மற்றும் வர்ணம் இரண்டையும் சாதிக்க வேண்டும்.
அப்படி ஒன்றும் சிரமமான வேலையில்லை என்பது புரிந்தது.
வரைதாள் நீரை உடனே உறிஞ்சிக் கொள்வதாய் இருந்தால் நலம். 1997-ல் வரைந்தது. சுமார் அரைமணி நேரத்தில் முடிந்தது என்று நினக்கிறேன்.
அளவு 30 cm x 20 cm.
5 comments:
mm...super!
நல்வரவு ப்ரியா,
படம் பிடிச்சிருக்குன்னு சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம். நன்றி
//மெல்லிய கிளை நுனியில் பறவையை தாங்க வேண்டுமானால் அந்தப் பறவை எவ்வளவு சிறியதாக இருக்க வேண்டும் என்பதே என் ஆச்சரியம்.//
ஆமாங்க... எனக்கும் அந்த ஆச்சரியம் உண்டு... அத்துணூண்டு இருந்துக்கிட்டு அது பாடற பாட்டு இருக்கே... சான்ஸே இல்லை... அத்தனை அருமை...
வாங்க ஸ்வர்ணரேக்கா,
//எனக்கும் அந்த ஆச்சரியம் உண்டு.//
ஆச்சரியங்கள்தான் நமக்கு இறைவனை நினைவூட்டுமாம், “சூரியன் வருவது யாராலே.. “ நாமக்கலாரது பாடல் பூராவே ஆச்சரியம்தான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
just superb!
Post a Comment