Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Friday, October 16, 2009

உயர உயரப் போகிறேன்...நீயும் வா

பழைய திரைப்படப் பாடல். “நாநாநான் உயர உயரப் போகிறேஏஏன்...நீயும்.ம்ம்ம்ம்/வா”. டி.எம்.எஸ் அந்த ’வா’வை ஒரு வெட்டு வெட்டி பாடுவார். குடிகாரன் ஒருவன் பாடுவது என்று சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். ஆனால் என்னமோ இந்த அன்னப் பறவையைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வரும்.

ஒரு சின்ன ப்ளைவுட்-ல் எப்போதோ வரைந்தது. ஆயில் வர்ணம் மங்கிப்போய் வானத்தில் பல ’பொத்தல்கள்’ விழுந்து ஒரு மாதிரியாக இருந்தது. அதை ஸ்கேன் செய்து கொஞ்சம் கணிணியின் பெயிண்ட் பிரஷ்-ல் சரி கட்டிய பின் தான் ’சரி எல்லோருக்கும் காட்டலாம்’ ங்கிற தைரியம் வந்தது.

ஹம்ஸம் அல்லது அன்னம் அப்படிங்கிற இந்தப் பறவை பற்றி நம்ம இதிகாசங்களில் கூட அடிக்கடி சொல்லப்படுது. ஆனா அது இப்ப நாம பார்க்கிற ஸ்வான் மாதிரி இருந்ததான்னு தெரியாது. கோவில் சிற்பங்களில், குத்து விளக்கில் காணப்படுகிற அன்னத்திற்கு மயில் மாதிரி உடல்,கால் தோகை, தலை மேல் கொண்டை எல்லாம் இருக்கும். ஆனால் அலகு மாத்திரம் கொஞ்சம் நீண்டு வாத்து அலகு மாதிரி இருக்கும்.

அன்னம் பிரம்ம தேவனின் வாகனம். தூய்மை,பற்றற்ற நிலை,பிரம்ம வித்தை மற்றும் எல்லா உயிர்களுக்குள் இயங்கும் பிராண சக்தியைக் குறிப்பதுன்னும் சொல்லுவாங்க. பறவைகளில் இது ஒன்றுதான் (?) நிலம் நீர் மற்றும் விண்ணில் சம அளவில் இயங்கக் கூடியதுன்னும் சொல்வதுண்டு.

அத்வைதத்தில் மிக உயர்ந்த பற்றற்ற நிலையை அடைந்தவரை குறிப்பிடும் போது பரமஹம்ஸர் என்று குறிப்பிடப்படுகின்றனர். காரணம், எவ்வளவு நேரம் நீரில் இருந்தாலும் ஒரு துளி கூட அது மேல ஒட்டாது. அது போல பரமஹம்ஸர்கள் எவ்வளவுதான் உலத்தாரோடு ஒட்டி உறவாடினாலும் அவர்கள் மனசி்லேயும் சிறிதளவும் பாதிப்பு இருக்காது.

சோஹம் சோஹம் (”நானே அது”) அப்படின்னு மனதில் சொல்லிக்கொண்டு மூச்சை கவனிக்கிற டெக்னிக் ஒண்ணு இருக்கிறதா சொல்வாங்க. அதுவும் இந்த ஹம் சா -ங்கிறதிலேந்து வந்ததுதான். அதனாலத் தான் அதை ப்ராணசக்தியோடு தொடர்பு படுத்தி சொல்றாங்க.

புத்த மதத்திலும் கூட....... ”தம்மாத்தூண்டு படத்த வரஞ்சுட்டு வுடற ரீலுக்கு அளவில்லையா ?” அப்படீன்னு யாரோ திட்றாங்க. அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

எல்லோரும் சந்தோஷமா தீபாவளி கொண்டாடுங்க. தீபாவளி நல்வாழ்த்துகள்

5 comments:

வல்லிசிம்ஹன் said...

கபீரன்பன்,
அந்தப் பாட்டைப் போட்டு இருக்கலாம். மிக அருமையான பாடல்.

அன்னத்துக்கும் அந்தப் பாட்டுக்கும் சம்பந்தம் இல்லை. அதுக்குத் தான் தண்ணீரே ஒட்டாதே:)

KABEER ANBAN said...

வாங்க வல்லி மேடம்,

நீங்க சொன்னப்புறம் தேடினேன். வெறும் < வரிவடிவம் இருக்கு, ஒலி வடிவம் இல்லை.
இன்னொண்ணும் புரிஞ்சது. அது குடிகாரன் பாட்டு இல்ல, டூயட் பாட்டு. நான் ஆணையிட்டால் படம்.
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

Sumi said...

very very very nice. chance e illa, sir! you were about to say something about Buddha, why did you stop. please tell me what it is...illana ennaku manadeye udanchudum.

best regards,

sumik

KABEER ANBAN said...

வருக சுமி மேடம்

பாராட்டுக்கு நன்றி

//tell me what it is...illana ennaku manadeye udanchudum ///

இன்னும் மேல தெரிஞ்சக்கணும்னா இநத வலைப்பக்கத்தைப் பாருங்க :))

அன்புடன் அருணா said...

ரொம்ப அருமை!