காஞ்சுபோன கருவேலங்காடு, பச்சை-ங்கறது மருந்துக்கு கூட இல்லை அதுக்கு நடுவிலே இப்படி கலர் கலரா ஒரு பறவை.
இந்த படத்தை ஃபிளிக்கரில் பார்த்த உடனே வரைந்து பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது. இந்த குருவி காணப்படுவது தென் ஆப்பிரிக்காவிலாம். நம்மூர் குருவி போலத்தான் இருக்கு ஆனா மல்டி கலர்.
சாதாரணமா என்னுடைய படமெல்லாம் A4 சைஸ்குள்ளே தான் இருக்கும். கொஞ்சம் பேராசைப்பட்டு பெரிய அளவில் ஆரம்பித்து விட்டேன். அதுவும் பேஸ்டல் வர்ணம். கடைசியில் அது ஸ்கேனருக்குள்ளே அடங்கவில்லை.
எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் பேஸ்டல் வர்ணத்தில் வெள்ளை வர்ணம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இதனால் வெளிச்சத்தினால் வரும் ஒளியூட்டல் சரியாக எடுபடவில்லை. குறிப்பாக கழுத்தின் அடிப்பக்கம், பிண்ணணியில் தெரியும் வெளிச்சம் போன்றவற்றை எடுத்துக் காட்ட இயலவில்லை.
ஹும்ம்ம்ம்... கத்துகிறதுக்கு நெறைய இருக்கு
9 comments:
கலர்கலரா நன்றாக இருக்கு தென் ஆப்ரிக்கா பறவை.. படத்தில் பேக்ரவுன்ட் சரியாக இல்லாதது போன்று தோன்றுகிறது.
வாங்க தர்ஷிணி,
நீங்க சொல்வதும் ஓரளவு சரிதான். பேக்ரவுண்ட் புகைப்படத்தில் அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக இருந்தாலும் அதை உலர்ந்த காடு என்று புரிந்து கொள்ள முடிந்தது. அதுதான் அதை காய்ந்து கிடக்கும் மரங்களாக வரைந்தேன்.
பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி
நல்லா இருக்கு சார்...
ஆப்ரிக்கப் பறவையை வாழ்த்தும் தமிழ்ப்பறவை....
தமிழ்ப்பறவையும் நெடுந்தூரம் பறக்க வாழ்த்துகள். நன்றி
படங்கள் பார்த்தேன். எல்லாமே நன்றாக இருந்தன.
இருந்தும் உங்கள் தலைப்பில் ஒரு கேள்வி://நான் ஒரு காலத்தில் வரைய மிக ஆசைப்பட்டேன்; பெரும் முயற்சிகளும் எடுத்து, தோல்வியே கண்டேன். 'சித்திரமும் கைப் பழக்கம்' என்பதைத் தவறென நிருபித்தது எனது தனிப் பெருமை.//
இப்படி இதில் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் பாருங்கள்.
நல்வரவு தருமி ஐயா,
//'சித்திரமும் கைப் பழக்கம்' என்பதைத் தவறென நிருபித்தது எனது தனிப் பெருமை.//
ஓ! எனக்கு பாடுவதில் ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கு சித்திரம் வரைவதில் ஏற்பட்டுள்ளதா?:))
பாட்டுப் போட்டியில் மூன்றாம் பரிசு வாங்கிய எனக்கு இன்றும் சுருதி தாளம் சுத்தமாகப் பிடிபடுவதில்லை.
”பாடப்பாட ராகம் வரும்” என்ற பழமொழியை பொய்யாக்கிய பெருமை எனக்கு உண்டு. :))
ஆனால் லாபம் இல்லாமல் இல்லை. நல்ல ஓவியங்களை ரசிக்கத் தங்களுக்கு ஒரு விருப்பு தோன்றி ஜெஸ்ஸிகா வலைப்பூ மாதிரி ஒன்றை ஆரம்பிக்க வைத்திருக்கிறதே! குழந்தையின் திறமைக்கு ஊக்கம் தந்தால் அருமையான ஓவியராக வருவாள்.
வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி
நன்றாக இருக்கிறது. நிறக்கலவைகள் அழகு. வால் பக்கம் முடிவறாதததைப் போல் இருக்கிறது.
வருக சுல்தான் ஐயா,
// வால் பக்கம் முடிவறாதததைப் போல் இருக்கிறது //
வால் இரட்டையாகப் பிரிந்து மெலிந்து நுனியில் மீண்டும் இணைகிறது. அதனால் பிரிகையின் இடையே பின்னணி தெரியும். அதனாலோ என்னவோ அது சரியாக முடிக்கப்படாததாகத் தெரிகிறது.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
குருவி ரொம்ப அழகு!
Post a Comment