Indian Mouth & Foot Painting Artists

உங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________

Saturday, June 27, 2009

செய்யும் தொழிலே தெய்வம்

இவர் தன் திரை அனுபவங்களை வாரப் பத்திரிக்கை ஒன்றில் தொடராக எழுதி வந்த பொழுது படித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

எல்லோரையும் விட படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து விடும் இவருக்கு ஒருமுறை கூட நடிகர் சிவகுமாரை முந்திக் கொண்டு வர முடியவில்லை. எப்பவுமே அவர்தான் முந்தி.

ஒருமுறை எப்படியாவது சிவகுமாரைவிட முன்னதாகப் போய் சேர்ந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு (யாருக்கும் அது பற்றி மூச்சு விடாமல்) வழக்கத்தை விட எல்லா வேலைகளையும் சீக்கிரமாகவே முடித்துக்கொண்டு அரைமணி நேரம் முன்னதாகப் படபிடிப்பு தளத்துக்குப் போய் சேர்ந்தார். இவர் எண்ணங்களை டெலிபதியில் தெரிந்து கொண்டாரோ என்னவோ மேக்கப் மேன் நாற்காலியிலிருந்தபடியே வணக்கம் சொல்லி இவரை வரவேற்றார் சிவகுமார்.


வாழ்க்கையில் இவர்கள் பெற்ற வெற்றிகளுக்கு வேறு காரணமே தேவையில்லை.

செய்யும் தொழிலே தெய்வம்.

4 comments:

thamizhparavai said...

குருவே...
நல்லா இருக்கு...
கண்ணாடி கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்...
நீங்க சொன்ன படி ஸ்கிரைப் ஃபைர் நிறுவிட்டேன்.. இன்னும் பதிவு போட்டுப் பார்க்கலை. போட்டுட்டு சொல்றேன். லிங்க் தந்தமைக்கு நன்றி...

KABEER ANBAN said...

நன்றி தமிழ்பறவை

//கண்ணாடி கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்...//

உண்மைதான். பொதுவாக ஒருமுறை முடிந்த வரைபடத்தை மீண்டும் திருத்த முற்படுவதில்லை. நீங்கள் குறிப்பிட்ட பிறகுதான் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. பென்சில் தானே :))

கருத்துக்கு நன்றி

thamizhparavai said...

அன்பு கபீரன்பன் சார்... உங்களைக் கேட்காமல் ‘கேள்வி-பதில்’ தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். தொடரவும்.
மேலும் விபரங்களுக்கு,http://thamizhparavai.blogspot.com/2009/07/32.html

dharshini said...

நன்றாக இருக்கு கபீரன்பன் சார்.