குழந்தைகளால் ஈர்க்கப்படாதவர்கள் இருக்க முடியாது.
பிராணிகளின் குட்டிகளாகட்டும், பறவைகளாகட்டும் அவற்றின் கவர்ச்சியே பெரிய்ய்ய்ய்ய கண்கள்தாம். கார்ட்டூன் படங்களிலும் உயிரோட்டம் தருவது பெரிய கண்களை உருட்டி உருட்டிக் காட்டப்படும் பலவிதமான உணர்ச்சிகளே.
பல சிறப்பான வரைபடங்களை பார்க்கும் போது கண்களை வரைவதில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியே தனித்து தெரியும். அப்படி ஒரு வலைப்பூ வை சமீபத்தில் பார்த்த தாக்கம் தான் கீழே காணும் குழந்தையின் படம்.
அவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் தரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே :(
ஆயினும் நமக்கு படம் வரைவதில் உற்சாகம் குன்றாமல் இருக்கிறதே அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
குழந்தையின் கன்னம் வழ வழ என்று வர வேண்டுமானால் அழுத்தமான கோடுகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த படம் முழுக்க முழுக்க பென்சிலை சுரண்டி எடுத்த கரிப் பௌடர், இரப்பர் அழிப்பான் மற்றும் விரல்ககளால் விரவுதல் செய்து வரையப்பட்டிருக்கிறது.
கற்றுக்கொண்ட முக்கிய பாடம் என்னவென்றால் மிக மிக மெல்லிய கரி பூச்சு கூட சுற்றி இருக்கும் பகுதிகள் அழிப்பானால் அழிக்கப்படும் பொழுது எடுப்பாகத் தெரிகிறது. அதனால் ஒளியின் மிக குறைந்த அளவு வேறுபாடுகளையும், தோல் சுருக்கங்களையும் வெளிக்கொணர முடிகிறது.
உபயோகப்படுத்தப்பட்ட பென்சில் (நேரடி பயன் பாடு மிகக்குறைவே) 2B.
கூடிய விரைவில் இதையே வர்ணத்தில் செய்ய முயற்சிக்கிறேன்.
எப்பப் பார்த்தாலும் பழைய படங்களையே போட்டு கொண்டிருப்பது என்னமோ போலிருந்தது. அதனால்தான் இம்முறை பிரத்யேகமான புத்தம் புது படம் :))
பிராணிகளின் குட்டிகளாகட்டும், பறவைகளாகட்டும் அவற்றின் கவர்ச்சியே பெரிய்ய்ய்ய்ய கண்கள்தாம். கார்ட்டூன் படங்களிலும் உயிரோட்டம் தருவது பெரிய கண்களை உருட்டி உருட்டிக் காட்டப்படும் பலவிதமான உணர்ச்சிகளே.
பல சிறப்பான வரைபடங்களை பார்க்கும் போது கண்களை வரைவதில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியே தனித்து தெரியும். அப்படி ஒரு வலைப்பூ வை சமீபத்தில் பார்த்த தாக்கம் தான் கீழே காணும் குழந்தையின் படம்.
அவர்களின் உழைப்பு மலைக்க வைக்கிறது. அவர்களின் தரத்தை எட்டிப்பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே :(
ஆயினும் நமக்கு படம் வரைவதில் உற்சாகம் குன்றாமல் இருக்கிறதே அதற்காக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
கற்றுக்கொண்ட முக்கிய பாடம் என்னவென்றால் மிக மிக மெல்லிய கரி பூச்சு கூட சுற்றி இருக்கும் பகுதிகள் அழிப்பானால் அழிக்கப்படும் பொழுது எடுப்பாகத் தெரிகிறது. அதனால் ஒளியின் மிக குறைந்த அளவு வேறுபாடுகளையும், தோல் சுருக்கங்களையும் வெளிக்கொணர முடிகிறது.
உபயோகப்படுத்தப்பட்ட பென்சில் (நேரடி பயன் பாடு மிகக்குறைவே) 2B.
கூடிய விரைவில் இதையே வர்ணத்தில் செய்ய முயற்சிக்கிறேன்.
எப்பப் பார்த்தாலும் பழைய படங்களையே போட்டு கொண்டிருப்பது என்னமோ போலிருந்தது. அதனால்தான் இம்முறை பிரத்யேகமான புத்தம் புது படம் :))
4 comments:
கொள்ளை அழகு சார்...
குழந்தையின் தலைமுடி,புருவம், கன்னங்களில் மென்மையை என்னால் உணரமுடிகிறது...
புது யுக்தியைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி சார்...
நல்வரவு தமிழ் பறவை,
//,,கன்னங்களில் மென்மையை என்னால் உணரமுடிகிறது.. //
நன்றி. அது இடுகையில் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் வலைப்பக்கத்திலிருந்து தெரிந்து கொண்டது. அவர்கள் பல ஓவியங்களை படிப்படியாக விவரித்திருப்பது நன்றாக இருக்கிறது.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
உற்சாகம் தந்தது உங்கள் பின்னூட்டம். நன்றி
ஆகா, ரொம்ப அழகா இருக்கு பாப்பா!
பாராட்டிற்கு நன்றி கவிநயா அவர்களே :)
Post a Comment