செய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது.
இது ஒரு ink & watercolor படம்.
கறுப்பு மையினால் லைன் டிராயிங் முடித்து பின்னர் நீர்வர்ண பென்சில்களால் அங்கங்கே கற்களின் பரிமாணம் தெரியும் வண்ணம் ஆரஞ்சு, மஞ்சள், நீலம், பச்சை வர்ணங்களை தேய்த்தேன்.
கடைசியாக வர்ணங்கள் ஒன்றோடு ஒன்று கரைந்து இணையும் வகையில் சிறிது நீரில் தோய்த்த பிரஷ்ஷினால் ஒரு பூச்சு கொடுத்தேன். ஓரிரு தினம் அதை இப்படி அப்படி வைத்து அழகு பார்த்தபின் அது எங்கே போயிற்று என்பது பற்றி நினைவு கூட இல்லாமல் மறந்து போனேன்.
சமீபத்தில் வேறு எதையோ தேடிக்கொண்டிருந்த போது திடீரென்று இது கண்ணில் பட்டது.
”எனக்கு உன் வலைப்பூவில் இடம் கிடையாதா” என்று கேட்பது போல் தோன்றியது :))
இந்த வளைவு எங்கே இருக்கிறது எவ்வளவு பெரியது என்ற விவரங்கள் இல்லாமல் எப்படி பிரசுரிப்பது என்று யோசித்தேன்.
தேடுவதில் சில நாட்கள் சென்றது. நான் நினைத்தது போல் ஆப்பிரிக்காவில் இல்லாமல் இது வட அமெரிக்காவில் உள்ள இயற்கை வளைவு ஆகும். உலகத்திலே மிகப்பெரியது எனலாம். 52 அடி உயரம் உடையது. காற்றின் அரிப்பால் இங்குள்ள செம்பாறைகளில் குடைவுகள் உண்டாகி ஏற்பட்டிருக்கும் வளைவு இது.
உடா (Utah) மாகாணத்தில் காணப்படும் 500 க்கும் மேற்பட்ட இயற்கை வளைவுகளில் இது மிகவும் பிரசித்தமானது. இதன் பெயர் Delicate Arch. அங்கே இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட இயற்கை சரகமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு பேணப்படுகிறது.
எப்போதாவது வாய்ப்பு கிடைச்சா போய் பார்க்க ஆசைதான் :))
6 comments:
கபீர்,
மிக்க நன்றாக உள்ளது. சித்தரம் வரைதல் உளத்துக்கு மகிழ்வுதரும் கலைதான். நிறைய வரையுங்கள்.
மது.
படமும் தகவலும் நன்று.
சிம்பிளா அழகா இருக்கு கபீர் சார்...வளைவின் பிரம்மாண்டத்தை விளக்க சிறு பொம்மைகள் போல இரு மனிதர்களை வரைந்து காட்டிய விதம்தான் ஓவியர் டச்... சூப்பர்...
நல்வரவு மதுவதனன்,
வரைப்படத்தை பாராட்டியதற்கு நன்றி.
அடிக்கடி வாருங்கள் :)
வாங்க ஊர்சுற்றி
நேரம் ஒதுக்கி இந்த பக்கம் வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி
தமிழ்பறவை வாங்க
//பிரம்மாண்டத்தை விளக்க சிறு பொம்மைகள் போல இரு மனிதர்களை வரைந்து ....//
அது வழக்கமானது தானே! பாம்பறியும் பாம்பின் கால் :)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Post a Comment