இந்த மனிதரின் கண்களில் தெரிவது என்ன ?
ஆழ்ந்த சிந்தனையா ?
அல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா?
இப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.
கண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.
முதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.
(பிற்சேர்க்கையில் விவரம் அறிக)
சரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.
ராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு
நிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.
பின் குறிப்பு:
வரைபடத்தை முறையாக பாதுகாக்காமையால் சில இடங்களில் மடிப்புகளும் சுருக்கங்களும் ஸ்கேனரிலும் விடாமல் ஒட்டிக்கொண்டு வந்துள்ளன. ஆகையால் உங்கள் படங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம் :))
பிற்சேர்க்கை :
வடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்தைக்கண்ட பின் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. உடனே என்னோட குறுக்கு மூளை சும்மா இருக்குமா ! எப்படி கஷ்டபடாமல் வர்ண அழுத்தத்தைக் கூட்டுவது என்று யோசித்தேன். அப்படியே பிக்காஸாவில் படத்தை திறந்து Auto contrast ஐ கூட்டிப் பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது. உடனே வலையேற்றி விட்டேன். :)))
நன்றி குமார் !!
7 comments:
ரசிக்க முடிகிறது ஆனால் அவ்வளவு அழுத்தமாக இல்லை.
தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்,எனக்கு ஓவியம் வரைவதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை அதனால் ஒருவேளை ரசிக்கமுடியாமல் போகிறதோ என்னவோ!
வாங்க குமார்,
//...அவ்வளவு அழுத்தமாக இல்லை//
உண்மை, இது நான் பேஸ்டல் கலர் உபயோகிக்கத் துவங்கிய காலம். அதில் தவறுகளை சரி செய்வது கடினமாதலால் அழுத்தமாக வர்ணங்களை பயன்படுத்தவில்லை.
//...தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்//
தவறாக எடுத்துக்கொள்ள ஒன்றுமில்லை. ருசிக்கத் தெரிந்தவனுக்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே :)))
அன்புள்ள குமார்
தங்களது பின்னூட்டம் நல்ல தூண்டுகோலாயிற்று. படத்தில் வர்ண அழுத்தம் கூட்டப் பட்டுள்ளது. கண்டு சொல்லவும்.
நன்றி
நன்றாக வந்திருக்கு வாழ்த்துக்கள்.
அவரைப்பற்றிய சிறுகுறிப்பும் கொடுத்ததற்கு நன்றி.
பாராட்டுக்கு மிக்க நன்றி தர்ஷிணி.
கபீர் சார்.. படம் தத்ரூபமா வந்திருக்கு..கை வைத்து அழுத்தியதால் முகவாயில் ஏற்பட்ட அழுத்தம், தலைமுடி,மீசை, காது, உதடு என அனைத்துமே அருமையாக வந்துள்ளது.
ரொம்ப சூப்பர்...
வர்ண பென்சில்ல வரைந்த பிறகு பேஸ்டல் கலர் கொடுத்தா, ரெண்டும் சந்திக்கும் இடம் சிறு டிஃபரன்ஸ் தெரியுமே..? அப்படி எதுவும் இதுல தெரியலையே...?! எப்படி..
இன்னும் ஒரு கேள்வி சார்...இந்தப் படம் எந்தக் காகிதத்தில் வரைந்தது? சொரசொரப்பான காகிதத்தில் வரைந்தது போலுள்ளது. அப்படியெனில் அத்ன் தொழில்நுட்பப் பெயர் என்ன?
நல்வரவு தமிழ்ப்பறவை
//வர்ண பென்சில்ல வரைந்த பிறகு பேஸ்டல் கலர் கொடுத்தா, ரெண்டும் சந்திக்கும் இடம் சிறு டிஃபரன்ஸ் தெரியுமே..? அப்படி எதுவும் இதுல தெரியலையே...?! எப்படி.///
பேஸ்டல் வர்ணத்தைக் கூட்டும் பொழுதும் கிரமமாக அழுத்தத்தைக் கூட்டி (pressure on the paper) பின்னர் ஸ்மட்ஜ் செய்து விட்டால் வித்தியாசம் தெரியாது.
///இந்தப் படம் எந்தக் காகிதத்தில் வரைந்தது? சொரசொரப்பான காகிதத்தில் வரைந்தது போலுள்ளது. அப்படியெனில் அத்ன் தொழில்நுட்பப் பெயர் என்ன ///
நீங்கள் சொன்னது சரி. இந்த வரைதாள் சற்று சொரசொரப்பாக இருக்கும். அதை tooth என்று சொல்கிறார்கள். மிகப் பெரிய ஆர்ட் ஷாப் களில் Canson (brand name) என்கிற பெயரில் கிடைக்குமாம். நான் வாங்கிய கடையில் அந்த சிறுவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆயில் பேப்பர் பேஸ்டல் பேப்பர் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டான். நானாக ஊகம் செய்து வாங்கி வந்தேன். ஹாண்ட் மேட் பேப்பரிலும் பேஸ்டல் பயன் படுத்தலாம். ஆனால் அதில் ஸ்மட்ஜ் செய்யும் போதும் அவ்வளவு நன்றாக வரவில்லை.
வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி
Post a Comment